சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாற போகிறதா "கலர்".. அதுக்குள்ள 60 தொகுதிகளை ரெடி பண்ணிருச்சா பாஜக.. அப்ப திமுக, அதிமுக கதி?

பாஜக தமிழகத்தில் 60 சீட் பிடிக்கும் என்று அடித்து சொல்கிறார் எல்.முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: எந்த நம்பிக்கையில் முருகன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.. "வருங்காலம் பாஜகவின் காலம்... தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பாஜக பெருமளவில் இருப்பர்" என்று கூறியுள்ளார்.

Recommended Video

    தனித்து போட்டியிட்டாலே பாஜக 60 தொகுதியில் வெல்லும் - எல் முருகன்

    எல்.முருகன் மாநில பொறுப்பை ஏற்று கொண்டதில் இருந்தே ஒருசில மாற்றங்கள் நடந்து வருகின்றன.. ஒரு சில அதிரடிகளும் நடந்து வருகின்றன.. ஆனால், பெரும்பாலும் மக்கள் நலன் சார்ந்தது இல்லை.

    கட்சிக்குள்ளேயே நடந்து வரும் மாற்றங்கள்தான்.. நிர்வாகிகளுக்கு பொறுப்பு தருவது, ஒரு கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது என உள்கட்சி விவகாரங்களில்தான் கவனம் செலுத்தி வருகிறது.. அது விசி துரைசாமியாகட்டும், சமீபத்தில் பொறுப்பு தந்த அண்ணாமலையாகட்டும்!

    வேதனைப்படுத்தும்...சுங்கக் கட்டணம்... திரும்பப் பெற....டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!வேதனைப்படுத்தும்...சுங்கக் கட்டணம்... திரும்பப் பெற....டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

    பாஜக

    பாஜக

    அக்கட்சியில், உறுப்பினர்கள் பலம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றும் தெரியவில்லை.. ஏற்கனவே இருக்கும் பாஜகவினர் சிலரும் கட்டுக்கோப்புடன் இல்லை.. நேற்றுகூட 6 ரவுடிகள் கையில் அரிவாளுடன் கட்சியில் சேர வந்திருக்கிறார்கள்.. ஏற்கனவே பாஜக பிரமுகர்கள் ஆங்காங்கே வன்முறையிலும், பாலியல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வரும்நிலையில், நேற்றைய இந்த ரவுடிகள் கைதான சமாச்சாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     ஊழல் வழக்கு

    ஊழல் வழக்கு

    "வழக்கு பதிய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதும் வழக்கு போட வேண்டும்" என்ற ஒரு வார்த்தையை தனது பேட்டியில் சொல்லி உள்ளார் முருகன்.. அப்படியென்றால், கட்சிகளின் மீதுள்ள ஊழல் வழக்குகளை கையில் எடுக்க போகிறதா பாஜக தலைமை என்று தெரியவில்லை.. "வருங்காலம் பாஜகவின் காலம்... சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பாஜக உறுப்பினர்களும் கணிசமான அளவில் இருப்பர்" என்று சொல்லி உள்ளதுகூட இந்த நம்பிக்கையில்தானா என்பது சந்தேகமாக உள்ளது.

     பிரதமர் கேர்

    பிரதமர் கேர்

    ஆனால், மக்கள் நலனில் எந்த அளவுக்கு மாநில பாஜக கவனத்தை செலுத்தி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி தரும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கவில்லை. நீட் தேர்வுக்கு பிள்ளைகள் இங்கே தவித்து கிடக்கும்போது, அது சம்பந்தமான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எந்த திட்டங்களும் நன்மைகளும் இதுவரை பெற்று தரவில்லை.

     சுங்க கட்டணம்

    சுங்க கட்டணம்

    எரிபொருள் சுங்ககட்டண உயர்வு மக்களை நெருக்கி தள்ளுகிறது. ஆனால், திடீரென பாஜக வளர்ந்துள்ளது என்று மட்டும் சொல்வதை ஏற்க முடியவில்லை.. ஒரு வேளை பல்வேறு கட்சிகளையும் கடைசி நேரத்தில் குழப்பி ஏதாவது செய்யப் போகிறதா பாஜக என்றும் புரியவில்லை. ஆனால் 60 என்று முருகன் அடித்துச் சொல்லியிருப்பது நிச்சயம் அனைத்துக் கட்சியினரும் கவனிக்க வேண்டிய ஒன்று!

     திமுக, அதிமுக

    திமுக, அதிமுக

    எங்கு திரும்பினாலும் நோட்டாக்களைதான் கடந்த தேர்தல்கள் அடையாளம் காட்டி உள்ள நிலையில், "நாங்க சும்மா தனியா நின்னாலே.. 60 சீட் கிடைக்குமே" என்று முருகன் சொல்லி உள்ளது பகல் கனவு என்றுதான் சொல்ல வேண்டும்.. தன்னம்பிக்கை தேவைதான்.. ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கைதான் கூடாது!

    English summary
    L Murugan Statement on BJP Chances in TN Assembly Election: TN BJP will will around 60 seats alone with majority numbers in Upcoming 2021 Tamil Nadu Assembly Elections, says L Murugan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X