குமரி, ராமநாதபுரம், தென்காசியில்.. பாஜகவிற்கு கன்பார்ம் வெற்றி? திகிலிடித்த கணிப்பு.. அப்போ திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி போன்ற இடங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக, அதிமுக பிரிக்கும், வாக்குகள் வெகுவாக பிரியும் என்பதால் என்பதால் பாஜக இங்கெல்லாம் வெல்லும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் யாத்தரையில் பிரேக் எடுத்த அண்ணாமலை அதை மீண்டும் தொடங்கி உள்ளார். அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் பாத யாத்திரை மீண்டும் தொடங்கி நடந்து சென்று கொண்டு இருக்கிறார். அவரின் இந்த பயணம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 BJP will win in Kanniyakumari , Ramanathapuam and Tenkasi says a massive internal survey

பேட்டி; அதில், எனக்கு கிடைத்த தகவலின்படி ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை பாஜக இழுக்க போகிறது. இவர்கள் கூட்டணி வைக்க போகிறார்கள். இது கண்டிப்பாக நடக்கும். 5 மாநில தேர்தலுக்கு பின் இவர்கள் கூட்டணி பற்றி அறிவிப்பார்கள். 5 மாநில தேர்தல் முடிந்ததும் இவர்களை அழைத்து பேசுவார்கள். அதில் கூட்டணி பற்றிய முடிவுகள் எடுக்கப்படும். என்டிஏ கூட்டணி இப்படி மாற்றத்தை காண உள்ளது.

இந்த என்டிஏ கூட்டணி பற்றி மோடி அண்ணாமலை யாத்திரையின் இறுதியில் அறிவிப்பார். அண்ணாமலை யாத்திரை நிறைவு நாளில் மோடி கலந்து கொள்வார். அப்போது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சந்திக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 2014 திட்டத்தின்படி அவர்கள் செயல்பட உள்ளனர். அதைதான் பாஜக பின்பற்றும். பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியட்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

( உடையும் கொங்கு அதிமுக? "அவருக்கு" பின்னால் திரண்ட எம்எல்ஏக்கள்? எடப்பாடி ஆதரவு இல்லையா? அதிருதே )

பாஜக பிளான்: பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக, அதிமுக பிரிக்கட்டும். அப்போதுதான் நாம் சில இடங்களில் வெல்ல முடியும் என்று பாஜக நினைக்கிறது. கோவை, சேலம், கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளில் வாக்குகள் பிரியும். இங்கெல்லாம் மும்முனை போட்டிகள் நிலவும். இந்த மும்முனை போட்டிகளால் வாக்குகள் பிரியும். இப்படி வாக்குகள் பிரிந்தால் கோவை, சேலம், கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளில் பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்கும்.

 BJP will win in Kanniyakumari , Ramanathapuam and Tenkasi says a massive internal survey

கூட்டணி முடிவு: அங்கே பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு வரலாம். அண்ணாமலை கணக்கு இதுதான். என்னை பொறுத்தவரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி போன்ற இடங்களில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக, அதிமுக பிரிக்கும் என்பதால் பாஜக இங்கெல்லாம் வெல்லும் என்று கருதுகிறேன். டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் இவர்களுடன் இருப்பதால் கண்டிப்பாக பாஜக இங்கே வெல்லும். 2014 நிலைமையை கொண்டு வர பாஜக பிளான் போட்டுள்ளது. 2019 நிலைமை இருக்க கூடாது என்று பாஜக இந்த முடிவில் இறங்கி உள்ளது.

அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்து நிற்பது உடனடியாக பலன் அளிக்காது. அது லேட்டாகும். இது ஆசிட் டெஸ்ட்தான். ஆனால் அண்ணாமலை வந்தே போதே இதற்கு தயாராகிவிட்டனர். அண்ணாமலை வந்தே போதே.. முதல் நாளில் இருந்தே பாஜகவை இதற்காக தயார் செய்து வருகிறார்கள். அப்போதே அவர் இதற்காக பாஜகவை தயார் செய்துவிட்டார். அதனால் இந்த முறை தேர்தல் நிலைமை மாறும்., என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+