Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கு அக்கா உடையுது.. ஹாட்ரிக் பாஜக? மீண்டும் ஜெயலலிதா? இது அண்ணாமலை கணக்கு.. கூட்டி கழிச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க போவதாக, மாநில தலைவர் அண்ணாமலை இன்று பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மீண்டும் அண்ணாமலை பேசியிருப்பது, அதிமுகவுக்குள் எரிச்சலை கிளப்பிவிட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில், இன்றைய தினம், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.. இதில், பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.. இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

BJPs Hatric Victory and Did TN Leader Annamalai say about Jayalalitha again what are the BJPs Strategies
பாஜக வெற்றி: பிறகு, கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசும்போது, ''ஜூன் 4ம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள். பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்'' என்று அண்ணாமலை சொன்னதுமே, ஒட்டுமொத்த அரங்கமும், கரகோஷம் எழுப்பியது.
தொடர்ந்து அண்ணாமலை பேசும்போது, "தாமரை அடர்ந்து, படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்கு பின் அனைவரும் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு, வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது... ஒரு தனிமனிதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும், இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமாக, வலிமையாக 3வது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கும். அந்தவகையில், இண்டியா கூட்டணியினரின் கனவுகளை, நாட்டு மக்கள் சுக்குநூறாக உடைக்க போகிறார்கள்..
கனவுகள்: தமிழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் இல்லாத வகையில் நாட்டை எதிர்க்கக்கூடிய ஆதிக்க சக்திகள் அதிகமாகியுள்ளன.. அதிலும், பிரதமர் மோடியை தவறான வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, கூட்டணி அமைத்திருக்கிறார்கள்" என்றார் அண்ணாமலை.

ஜெயலலிதா: இதுஒருபுறமிருந்தாலும், இன்றைய கூட்டத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றின பேச்சை எடுத்திருந்தார் அண்ணாமலை... ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசும்போது, ''1991ம் ஆண்டு ஓட்டு எண்ணிக்கையின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி தந்திருந்தார்.

அந்த பேட்டியில், இந்தியாவை பொறுத்தவரைக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என்பது 2 சாதிகள் அல்லது ஹிந்து, முஸ்லிம் போன்ற 2 மதங்களுக்கு இடையேதான் நடக்கும். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான், சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்பது நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கும், நாட்டிற்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையிலானதாக உள்ளது. அதனை கடுமையாக எதிர்ப்பேன்'' என்று கூறியிருக்கிறார்" என்று ஜெயலலிதா பற்றி அண்ணாமலை குறிப்பிட்டார்.

இந்துத்துவா: இப்படித்தான் 4 நாட்களுக்கு முன்புகூட, ஒரு சேனலுக்கு அண்ணாமலை தந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டினார்.. அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டதால், அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்த விகே சசிகலா, ஜெயலலிதாவை குறுகிய வட்டத்திற்குள் யாரும் அடைக்க முடியாது என்று காட்டமான பதிலடியை தந்திருந்தார்.. அதேபோல, அதிமுகவும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

அரிசி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கி வைத்தவர்.. தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தவர். அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்பதுபோல பாஜக திரித்து பேசுவது ஏன் என்பதே அதிமுகவின் வாதமாக உள்ளது.

இங்கு இன்னொரு விஷயத்தையும நினைவுகூர வேண்டியிருக்கிறது.. 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் பிரதமர் மோடி பேசும்போதும் ஜெயலலிதாவை திடீரென புகழ்ந்து பேசியிருந்தார்.

பிரதமர் மோடி:
"தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு யாராவது ஒருவர் நல்லாட்சி கொடுத்து இருப்பார்கள் என்றால், அது அம்மா ஜெயலலிதா மட்டும் தான்.. தமிழக மக்கள் நலனுக்காக முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று சொல்வேன். எம்ஜிஆர் கொள்கைகளை கடைப்பிடித்து மக்களுக்காக செயல்பட்டவர் ஜெயலலிதா.. இதனால் தான் ஜெயலலிதா அனைத்து வீடுகளிலும் நினைவுப்படுத்தப்படுகிறார்'' என்று பிரதமர் பேசியபோதே, அதிமுக குழம்பியது.

விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ள நிலையில் மீண்டும் ஜெயலலிதா குறித்து விடாமல் பேசிவருகிறது பாஜக.. இன்றைய தினமும் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பேசியிருக்கிறார்.

தமிழிசை: அதுபோலவே, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று ஜெயலலிதா குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

"இந்துத்துவா தலைவரான ஜெயலலிதா, இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர்.. என்றும், ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம், ஆனால், ஜெயலலிதாவை அதிமுகவினர் தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கிறார்கள்.. இன்று ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார்" என்று இன்று கூறியிருக்கும் கருத்துக்கள், அதிமுகவின் கூடாரத்தையே அசைத்து பார்க்க துவங்கிவிட்டமுத.

சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டபிறகு, ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியே பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவது, மிகுந்த குழப்பத்தை ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறதாம்.


பரபரப்பு: அதுமட்டுமல்லாமல், அதிமுக ஓட்டுக்களை, மொத்தமாக தங்கள் பக்கம் திருப்புவதற்காகவே, இந்த "பிரிவினை அரசியலை" பாஜக முன்னெடுத்துள்ளதாகவும் அதிமுக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகள், அரசியல் களத்தை மீண்டும் அனலாக்கி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+