சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 கல்லூரி மாணவிகளின் உடல்கள்! யார் அவர்கள்?
சென்னை: சென்னை எண்ணூர் அருகே கடற்கரையில் 4 கல்லூரி மாணவிகளின் உடல்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைக்கு இன்று 4 கல்லூரி மாணவிகள் வந்தனராம். அவர்கள் 4 பேரும் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டுள்ளனர். அப்போது ஒரு பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மூவரும் அந்த ஒருவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் எண்ணூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது 4 பெண்களின் உடல்களும் கரை ஒதுங்கியது. இதையடுத்து அந்த உடல்களை போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில் ஷாலினி, தேவகி, காயத்ரி, பவானி என தெரியவந்தது. 4 பேரும் கல்லூரி மாணவிகளாம். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications