"மேட் இன் தமிழ்நாடு".. முதல்முறையாக தமிழகத்தில் அமைக்கப்படும் பெரிய போயிங் தொழிற்சாலை.. செம பின்னணி
சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக போயிங் தொழிற்சாலை தமிழகத்தில் அமைய உள்ளது. மிகப்பெரிய விமான நிறுவனமான போயிங்கிற்கு இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து உதிரி பாகங்கள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருக்க வேண்டும் என்பதற்காக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதனால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் சூர்ய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட மின்சார திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 22ம் தேதி சென்னையில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இதில் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்து பேசினார்.

என்ன பேசினார்?
முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் உற்பத்தியை பெருக்க வேண்டும். ஏற்றுமதியில் நாம் ஏற்றம் பெற வேண்டும், இந்தியாவில் ஏற்றுமதியில் நாம் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று நாம் 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம். சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி பெருக வேண்டும். இன்று தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் எல்லா மூலையிலும் மேட் இன் இந்தியா என்று பொருட்கள் இருப்பது போல மேட் இன் தமிழ்நாடு என்று நம்முடைய தயாரிப்பு செல்வதை உறுதி செய்ய வேண்டும், என்று குறிப்பிட்டார்.

போயிங்
இந்த நிலையில்தான் தற்போது போயிங் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஆம் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று போயிங். எந்த அளவிற்கு போயிங் விமானம் பெரியது என்றால் இப்போது வானத்தில் இந்த நொடியில் பறக்கும் விமானங்களில் அதிக அளவு விமானங்கள் போயிங் நிறுவன தயாரிப்பாகவே இருக்கும். ஏனென்றால் பெரும்பாலான முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் போயிங் நிறுவனத்திடம் இருந்துதான் விமானங்களை வாங்குகிறது.

விமானம்
பயணிகள் விமானம் மட்டுமின்றி விமானப்படை விமானங்களையும் போயிங் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை நிறுவனம் ஒன்று மேற்கொண்டு உள்ளது. சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மாநாட்டை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சேலம் நிறுவனம்
இதனால் இனி போயிங் நிறுவன பாகங்கள் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுவது போல தமிழ்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படும். சேலத்தில் இயங்கி வரும் இந்த ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதற்காக ஓசூரில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இது நீண்ட கால தொழிற்சாலையாக அமையும். ஓசூரில் 150 கோடி ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்படும். 1000 பேர் வரை இதன் மூலம் வேலை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர்
இது தொடர்பாக முதல்வர் செய்துள்ள ட்வீட்டில், தமிழ்நாட்டில் முதல்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு விமான பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்- ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுந்தரம் மாண்புமிகு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் முன்னிலையில் பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications