சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பட்டப்பகலில் நடந்த ஷாக் சம்பவம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் 196வது வார்டு மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு வார்டு கவுன்சிலர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவைச் சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை டூவிலரில் வந்த இருவர், அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளாரா எனக் கேட்டுவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. நாட்டு வெடிகுண்டு வீசியதும் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறி ஓடினர்.
தலைநகரில், மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகத்தில் பட்டப் பகலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிய இருவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications