போலீஸ்காரங்க இருக்கிற இடத்துல குண்டு வைக்க போறேன்.. மிரட்டல் விடுத்த நபர் ஓவர் நைட்டில் கைது!
போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "போலீஸ்காரங்க, மக்கள் அதிகமாக இருக்கிற இடத்துல குண்டு வைக்க போறேன்.. முடிஞ்சா என்னை பிடிங்க பார்க்கலாம்" என்று மிரட்டல் விடுத்த நபரை ஓவர் நைட்டில் போலீசார் அள்ளிக் கொண்டு வந்துவிட்டனர்.
சென்னை கன்ட்ரோல் ரூமுக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒருவர், "நான் அறந்தாங்கியில் இருந்து பேசறேன்.. மக்கள் எங்கே நிறைய கூடி இருக்காங்களோ, போலீஸ்காரங்க எங்கே அதிகம் கூடி நிக்கிறீங்களோ அங்க நான் குண்டு வைக்க போறேன். முடிஞ்சா என்னை பிடிங்க பார்க்கலாம்" என்று சொன்னார்.

அது மட்டுமில்லாது, போலீஸ்காரர்களை வாய்க்கு வந்தபடி அசிங்க அசிங்கமாக பேசிவிட்டு போனையும் வைத்துவிட்டார். இதையடுத்து உஷாரான போலீசார், அந்த செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை போரூர் அடுத்த ராமாபுரத்தில் இருந்துதான் அழைப்பு வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராயலாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொஞ்ச நேரத்தில் மிரட்டல் விடுத்த நபரின் வீட்டுக்கே போய்விட்டனர் நம் போலீசார். அங்கே போதையில் தூங்கி கொண்டிருந்த அந்த மர்ம நபரை போலீசார் அமுக்கி கைது செய்து அழைத்து வந்தனர்.
விசாரணையில், அவர் அறந்தாங்கியை சேர்ந்த அன்புராஜ் 48, என்பதும், கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்பவர் என்பதும் தெரியவந்தது. இப்படி எதுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அவருக்கு ஊரில் நில பிரச்சனை இருக்காம், அதை போலீசில் சொல்லியும் யாருமே தீர்த்து வைக்கவில்லையாம். அதனால்தான் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அன்புராஜ் வாக்குமூலமாக சொன்னார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications