சென்னையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும்.. இமெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு! சல்லடை போட்ட போலீசார்
சென்னை: சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை நந்தனம் ஒய்.எம்சி.ஏ வளாகம், பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் எங்கும் வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.
எனவே, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான பயணிகள், உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். விமானம் தனிமைப் படுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.
அதில் சந்தேகப்படும்படியான பொருள் ஏதும் சிக்கவில்லை. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த வாரம் டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications