சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! மெயில் அனுப்பியது யார்? சைபர் கிரைம் விசாரணை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் ஜார்ஜ் டவுனில் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நீதிபதிகளும் உயர்நீதிமன்ற ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். அது போல் வழக்கு தொடர்பாக பொதுமக்கள், திரை பிரபலங்கள், காவல் துறை அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் என வருகை தருவதுண்டு.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இமெயிலில் தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், காவல் துறைக்கு புகார் தெரிவித்தனர்.
புகாரை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்களுடன் போலீஸாரும் வந்தனர். அப்போது அங்கு பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் இருந்த 100- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் யார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த இமெயில் முகவரியை கண்டறிய முடியாமல் சைபர் கிரைம் போலீஸார் திணறினர்.
இந்த முறையும் யார் மெயில் அனுப்பியிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகியுள்ளது.
கடற்கரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications