"10 கப்பல் வாங்கல.. 2 தான் வாங்கப்பட்டது”.. அண்ணாமலை குறுக்கு விசாரணைக்கு டி.ஆர். பாலு பதில்!
சென்னை: “மத்திய அமைச்சராக இருந்தபோது 10 அல்ல.. 2 கப்பல்கள் தான் வாங்கினேன்” என அண்ணாமலை மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலு வாதம் வைத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, 'திமுக ஃபைல்ஸ்' (DMK Files) என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். அதில், திமுக பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

டிஆர் பாலு vs அண்ணாமலை
மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலையின் குற்றச்சாட்டு தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குறுக்கு விசாரணை
திமுக எம்.பி டி.ஆர். பாலு, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அண்ணாமலை தரப்பு நடத்திய குறுக்கு விசாரணணை கேள்விகளுக்கு டிஆர் பாலு பதில் அளித்தார்.
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு 10 கப்பல்களை சொந்தமாக விலைக்கு வாங்கினார் என மு.க.அழகிரி 2014 ஆம் ஆண்டு கருத்து தெரிவித்தார். அதுகுறித்து பத்திரிகைகளில் செய்து வந்தது. அது ஞாபகம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
டிஆர் பாலு பதில்
அப்போது டி.ஆர். பாலு, "மத்திய அமைச்சராக இருந்தபோது நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 10 மீன்பிடி கப்பல்கள் வாங்கியதாக மு.க. அழகிரி விஷயம் தெரியாமல் பேசியிருந்தார். அதனை ஆதாரமாக வைத்து அண்ணாமலை என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நான் அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்கள் வாங்கவில்லை, 2 கப்பல்கள்தான் வாங்கினேன். சேது சமுத்திரத் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அது காமராஜரின் கனவுத் திட்டம். அண்ணாமலையின் குற்றச்சாட்டு அவதூறானது" என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார்.
10 கப்பல் வாங்கல
அழகிரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தீர்களா? என்ற கேள்விக்கு, “நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக சொல்வதில் உண்மையில்லை, உள்நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை. 10 கப்பல்கள் இல்லை. 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது. அழகிரி விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ளார். அதற்காக அவதூறு வழக்கு தொடர தேவையில்லை. அண்ணாமலையும் அரைவேக்காட்டு தனமாக அதை ஆதாரமாக கொடுக்கிறார்.” என டிஆர் பாலு பதில் அளித்தார். இரு தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே












Click it and Unblock the Notifications