சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் கட்டுமான பணியில் விபத்து.. பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியின் போது 80 அடி நீளத்திற்கு பாலத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திடீரென இரு தூண்களுக்கு இடையேயான பாலத்தின் மேற்பரப்பு பகுதியானது இடிந்து விழுந்தது. கிட்டத்தட்ட 80 அடி நீளமுடைய பாலத்தின் மேற்பகுதி அப்படியே இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக இடிந்து விழுந்த இடத்தில் பணிகள் ஏதும் நடக்காததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் பொதுமக்கள் வராத வகையில் தடுப்பு வைத்து அடைத்தனர். விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து, அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்ததா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications