ஜியோ, ஏர்டெல் எல்லாம் கிட்டவே நெருங்க முடியாது.. வெறும் ரூ.397ல் 150 நாட்கள்.. தினசரி 2 ஜிபி டேட்டா!
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அருகில் கூட வர முடியாத அளவுக்கு 397 ரூபாயில் 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை வைத்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அழைப்பு மற்றும் இணைப்பிற்காக செகண்டரி சிம்மை ஆக்டிவ்வாக வைத்திருக்க விரும்பும் யூசர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கடந்த மாதம் அதிரடியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் வெகுவாக அதிருப்டி அடைந்துள்ளனர். இந்த சூழலில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் கலக்கலான பிளான்களை வழங்கி வருகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மிகக் குறைவான விலையில் அதிக பலன்களை தரும் ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் மொபைல் போன் பயனர்கள் மத்தியில் பி.எஸ்.என்.எல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. பி.எஸ்.என்.எல்லின் ஒரு செமத்தியான ரீசார்ஜ் பிளான் பற்றி பார்க்கலாம்.
மலிவு விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், BSNL உங்களுக்கான சூப்பரான பிளான்களை வழங்குகிறது. இதில் ரூ.397 திட்டமும் ஒன்று. இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 Kbps வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்.
இது தவிர, இந்த பிளானில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த 397 ரூபாய் பிளானில் 150 நாட்கள் வேலிடிட்டி என்றாலும், இலவச வாய்ஸ் கால் நன்மைகள் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மீதமுள்ள 120 நாட்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டு தொடர்ந்து ஆக்டிவ்வாக இருக்கும். 30 நாட்களுக்கு பிறகு டேட்டா, வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் சலுகை வேண்டுமானால் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அழைப்பு மற்றும் இணைப்பிற்காக செகண்டரி சிம்மை ஆக்டிவ்வாக வைத்திருக்க விரும்பும் யூசர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காரணம், ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களில் 28 நாட்களுக்கே குறைந்தபட்ச டேட்டாவுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் வசதிக்கு ரூ. 199 செலுத்த வேண்டி உள்ளது. இதுவே, 150 நாட்களுக்கு கணக்கிட்டால் 1000 ரூபாய்க்கும் அதிகமாக வரும். இடையே ரீசார்ஜ் செய்யாமல் விட்டால் இன்கமிங் அழைப்புகளையும் பெற முடியாது.
ஆனால், பி.எஸ்.என்.எல், முதல் ஒரு மாதத்திற்கு தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் வசதிகளை வழங்குவதோடு, அடுத்த 4 மாதங்களுக்கு சிம்மை ஆக்டிவ்வாக வைத்திருக்கும் வகையில் கூடுதல் வேலிடிட்டியையும் வழங்குகிறது. எனவே, இது ஒரு சூப்பரான திட்டம் என்பது நிச்சயம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications