வாடிக்கையாளர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த BSNL.. 3 சூப்பரான ரீசார்ஜ் பிளான்கள் நிறுத்தம்!
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம், 3 முக்கியமான ரீசார்ஜ் பிளான்களை நிறுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் பலர் BSNL-க்கு மாறி வந்த நிலையில், குறைந்த விலை கொண்ட 3 பிளான்கள் நிறுத்தப்பட உள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிரடியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. தனியார் நிறுவனங்களின் அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் மக்கள் வெகுவாக அதிருப்தி அடைந்தனர். அதேசமயம் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். குறைந்த விலையில் கலக்கலான பிளான்களை வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல்
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மிகக் குறைவான விலையில் அதிக பலன்களை தரும் ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருவதால் மொபைல் போன் பயனர்கள் மத்தியில் பி.எஸ்.என்.எல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. பலர் தங்களுடைய மொபைல் எண்களை BSNL-லுக்கு போர்ட் செய்ய ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக, பி.எஸ்.என்.எல்லும் தமது சேவையை சிறப்பாக வழங்க திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில், BSNL தமது வாடிக்கையாளர்களுக்கான நெட்வொர்க் இணைப்பை மேம்படுத்த 65,000 க்கும் மேற்பட்ட 4G மொபைல் டவர்களை நிறுவியுள்ளது.
3 பிளான்கள் நிறுத்தம்
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், 3 முக்கியமான பிளான்களை நிறுத்த உள்ளது. நீண்ட வேலிடிட்டி கொண்ட குறைந்த விலையிலான பிளான்களை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதியோடு நிறுத்த இருக்கிறது பிஎஸ்என்எல். ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2,999 ஆகிய விலை கொண்ட பிளான்களை நிறுத்த உள்ளது பிஎஸ்என்எல்.
இதுதொடர்பாக, வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து மெசேஜ்களை பெற்றுள்ளனர். "201, 797, மற்றும் 2999 பிளான் வவுச்சர்கள் 10.02.2025 முதல் நிறுத்தப்படும். மற்ற வவுச்சர்கள் பற்றிய விவரங்களுக்கு, தயவுசெய்து செல்ஃப்கேர் செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் ரீசார்ஜில் 2 சதவீத தள்ளுபடியைப் பெறுங்கள்" என குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்
குறைந்த செலவில் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் பெஸ்ட் சாய்ஸாக இருந்தது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள். இதில் 300 நிமிடங்கள் கால்ஸ் மற்றும் 6 ஜிபி டேட்டா கிடைக்கும். அதிகமாக போனை பயன்படுத்த மாட்டோம், அதேசமயம் தொடர்ந்து இந்த எண் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு இந்த பிளான் சிறந்ததாக இருந்தது. இந்நிலையில் இந்த பிளான் நிறுத்தப்பட உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.797 திட்டம்
ரூ.797 திட்டம் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது, இந்த ரீசார்ஜ் மூலம் உங்கள் சிம் சுமார் 10 மாதங்கள் செயலில் இருக்கும். முதல் 60 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால்ஸ், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்பட்டு வந்தது. 60 நாட்களுக்குப் பிறகு கால் அல்லது டேட்டா சலுகைகள் கிடைக்காது. இந்த பிளானும் விரைவில் நிறுத்தப்பட உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.2,999 பிளான்
இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு வருட வேலிடிட்டி கொண்டது. அதாவது, இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைத் தவிர்க்கவும், ஒரே நேரத்தில் முழு வருடத்திற்கும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இது மிகவும் சிறந்ததாக இருந்தது.
இந்த 3 பிளான்களும் விரைவில் நிறுத்தப்பட உள்ளன. மாற்று பிளான்கள் கொண்டு வரப்படுவதால் மேற்கண்ட இந்த மூன்று பிளான்களும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications