Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்- அதிர வைக்கும் 5,000 பக்க போலீஸ் குற்றப்பத்திரிகை-1

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் போலீசார் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் எப்படி அரசியல் தலைவராக உருவெடுத்தார்? ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணி என்ன? ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் எப்படி இந்த படுகொலையை அரங்கேற்றினர்? என்கிற அதிர்ச்சி விவரங்களை இந்த 5,000 பக்க குற்றப்பத்திரிகை விவரிக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் மிக கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

crime armstrong armstrong murder case bsp

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் மொத்தம் 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்போ செந்தில் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் வடசென்னை தாதா நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேருக்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் யார்?: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான 5,000 பக்க குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: திருவள்ளூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். 2006-ல் சென்னை மாநகராட்சி கவுன்சிலரானார். 2007-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தமிழக காவல்துறை பதிவுகளில் குற்றவாளியாக தொடக்கத்தில் இடம் பெற்றிருந்த ஆம்ஸ்ட்ராங் பின்னர் அவர் மீதான அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

crime armstrong armstrong murder case bsp

'கஞ்சா அஞ்சலை'க்காக தென்னரசு கொலை: ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் தென்னரசு 2015-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தென்னரசுவைப் படுகொலை செய்தது ஆற்காடு சுரேஷ். (தென்னரசுவும் ஆற்காடு சுரேஷும் நகமும் சதையுமாக இருந்தவர்கள்; புளியந்தோப்பு அஞ்சலை என்ற பெண்ணுக்காக இருவரும் எதிரிகளாகி கொலை வரைக்கும் சென்றது). தென்னரசு கொலையில் ஆற்காடு சுரேஷுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக தாதா நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இங்கிருந்துதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான மோட்டிவ் தொடங்குகிறது. (அதாவது நண்பரும் வலது கரமுமான தென்னரசு கொலையில் ஆற்காடு சுரேஷ் மற்றும் ரவுடி நாகேந்திரன் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளாகினர்)

crime armstrong armstrong murder case bsp

தாதா நாகேந்திரன் குடும்பத்துடன் மோதல்: அடுத்ததாக சோழவரத்தில் 150 ஏக்கர் நிலம் ஒன்றை சேகர் என்பவர் விற்பனை செய்ய முயற்சித்தார். சேகருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தாதா நாகேந்திரனின் மகனுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தகராறில் ஈடுபட்டு 10 ஏக்கர் நிலத்தைப் பறிக்க முயன்றார். இந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்க், சேகர் தரப்புக்கு ஆதரவாக இறங்கினார். வழக்கறிஞர் அஸ்வத்தாமன் மீது ஆம்ஸ்ட்ராங் உதவியால் போலீசில் புகார் கொடுக்கிறார். இப்போது மீண்டும் சிறையில் இருக்கும் நாகேந்திரன் தலையிட்டு ஆம்ஸ்ட்ராங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து அஸ்வத்தாமன் மீதான புகாரை சேகர் தரப்பு வாபஸ் பெற்றது. இந்த புகார் விவகாரத்தால்தான் அஸ்வத்தமானுக்கு லோக்சபா சீட் கிடைக்காமல் போனதாம்.

crime armstrong armstrong murder case bsp

சம்பவம் செந்திலுடன் மோதல்: அடுத்ததாக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கேபிள் டிவி தொழில் நடத்தி வந்தார். ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் வீட்டை எளிதாக காலி செய்ய மறுக்கிறார். இதில் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு வீட்டின் உரிமையாளரிடம் இருந்து ரூ12 லட்சத்தை கூட்டாளிக்குப் பெற்றுத் தருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் தெரியுமா? சென்னை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான 'சம்போ' செந்தில் என்ற சம்பவம் செந்திலின் தாயாருடையது. இதனால் சம்பவம் செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் பகை உருவெடுக்கிறது.

crime armstrong armstrong murder case bsp

ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிராக இணைந்த ரவுடிகள்: அதாவது ஆற்காடு சுரேஷ்- நாகேந்திரன் - அஸ்வத்தாமன் - சம்பவம் செந்தில் ஆகியோருக்கு பொதுவான எதிரியாகிறார் ஆம்ஸ்ட்ராங். ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டுத் தர வெளிநாடுகளில் இருந்து சம்பவம் செந்தில் அதனை தமிழ்நாட்டில் அரங்கேற்ற இந்த கூட்டணி வலிமையான ஒன்றாகிவிட்டது. ஆம்ஸ்ட்ராங் மீது இந்த கேங் கோபம் கொப்பளிக்க 'காலம் வரட்டும்' என காத்திருந்தனர். (தொடரும்)

crime armstrong armstrong murder case bsp
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+