"350 kmph வேகம்.." வெறும் 1.5 மணி நேரத்தில் சென்னை- பெங்களூர்.. மிரள வைக்கும் அதிவேக ரயில் சேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் நேற்று பல முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 7 அதிவேக ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இரண்டு சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னையில் இருந்து வெறும் 1.5 மணி நேரத்தில் பெங்களூர் செல்ல முடியும். சென்னை- ஹைதராபாத் பயண நேரமும் வெறும் 3 மணி நேரமாகக் குறையும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் சில முக்கியமான அறிவிப்புகளை அறிவித்தார். அதிலும் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ₹16 லட்சம் கோடி செலவில் 4000 கி.மீ தூரத்திற்கு ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் அவர் அறிவித்தார். இவை ஐந்து தென் மாநிலங்கள் உட்படப் பல பகுதிகளை இணைத்து, வளர்ச்சி காரிடார்கள் உருவாக்கப்படும்.

Budget 2026 Chennai Bangalore and Chennai Hyderabad to get High speech rail Major things to know
Photo Credit:

7 அதிவேக ரூட்கள்

மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூர், ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூர், டெல்லி-வாரணாசி மற்றும் வாரணாசி-சிலிகுரி ஆகிய ரூட்களில் இந்த அதிவேக காரிடார் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் குறையும்

இப்போது சென்னை பெங்களூர் இடையே ரயில்களில் பயணிக்கச் சராசரியாக 4.30 மண் நேரம் ஆகிறது. ஆனால், இந்த அதிவேக ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் இந்த 350 கிமீ தூரம் வெறும் 1.30 மணி நேரமாகக் குறையும். அதேபோல சென்னை ஹைதராபாத் இடையே ரயில் பயணம் 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும் நிலையில், அதுவும் 3 முதல் 3.30 மணி நேரமாகக் குறையும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல பெங்களூர்- ஹைதராபாத் (2 மணிநேரம்), புனே- ஹைதராபாத் (1 மணி 55 நிமிடங்கள்), புனே- மும்பை (45 நிமிடங்கள்), டெல்லி- வாரணாசி (3 மணி 50 நிமிடங்கள்) மற்றும் வாரணாசி- சிலிகுரி (2 மணி 55 நிமிடங்கள்) என முக்கிய ரூட்களில் பயண நேரம் கணிசமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சியை உறுதி செய்யும்

ஐந்து தென் மாநிலங்கள் இணைக்கப்படுவதால், இது அப்பகுதிகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். மேலும், மேற்கு வங்கத்தின் டான்குனியை குஜராத்தின் சூரத்துடன் இணைக்கும் பிரத்தியேகச் சரக்கு ரயில் வழித்தடத்தையும் நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த 2026-27 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ₹2,78,030 கோடி மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26 திருத்தப்பட்ட மதிப்பீடான ₹2,55,466 கோடியை விட 10.8% அதிகமாகும். ரயில்வேயின் மொத்த மூலதனச் செலவு ₹2,93,030 கோடியாக இருக்கிறது.

எவ்வளவு ஒதுக்கீடு

அதிவேக ரயில் திட்டங்கள் ஒரு பக்கம் என்றால் ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் ரயில்வே துறை பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளான தண்டவாள பராமரிப்பு, என்ஜின்கள், பெட்டிகள், 'கவச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவலுக்கு ₹1,20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு ₹3.09 லட்சம் கோடி மூலதனச் செலவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒதுக்கீடு ₹1.70 லட்சம் கோடியிலிருந்து ₹1.87 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+