கொரோனா சப்ளையராக மாறும் பஸ்கள்.. பிதுங்கி வழியும் கூட்டம்.. இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவா அது எங்கே இருக்கு.. என்ற மனநிலையில் மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். உயிரை பணயம் வைத்து பஸ்களில் மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதை பார்த்தால் மனசுக்குள் திக், திக் என்கிறது.

Recommended Video

    நிரம்பி வழியும் பஸ்கள்.. கொரோனா அச்சமின்றி பயணிக்கும் மக்கள் - வீடியோ

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக என்று கூறி கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சொந்த வாகனங்களில் கூட அநாவசியமாக மக்கள் வெளியே செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது அரசு.

    இதன்பிறகு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தை தவிர்த்து பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

    தமிழகம் முழுக்க

    தமிழகம் முழுக்க

    பின்னர், ஜூன் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியது. எனவே, ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
    அதன் பிறகு, செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.
    அதன் பிறகு, செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், செப்டம்பர் 7ம் முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.

    போக்குவரத்து துவக்கம்

    போக்குவரத்து துவக்கம்

    எனவே, தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டது.

    மாஸ்க் அணிவதில்லை

    மாஸ்க் அணிவதில்லை

    இருந்தாலும் இதெல்லாம் சில நாட்கள்தான். இப்போது, சமூக இடைவெளி என்றால் கிலோ என்னவிலை என கேட்கிறார்கள் மக்கள். தொழில்கள் இயங்க தொடங்கிவிட்டன. திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. எனவே மக்கள் பெருமளவுக்கு பஸ்களை நாடத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு பஸ்சிலும் நிரம்பி வழியும் கூட்டம் இருக்கிறது. கணிசமானோர் மாஸ்க் போடுகிறார்கள். சிலர் மூக்கை திறந்து வைத்துவிட்டு வாய்க்கு மட்டும் மாஸ்க் போடுகிறார்கள். காற்று வசதியே இல்லை இதற்கு ஏன் மாஸ்க் என்று பஸ்சில் சிலர் மாஸ்க் அணியாமல் போவதையும் பார்க்க முடிகிறது.

    சமூக இடைவெளி எங்கே

    சமூக இடைவெளி எங்கே

    நம்மூரில் மக்கள் அணிவது என்95 மாஸ்க் இல்லை. சாதாரண துணி மாஸ்க். இது முழுமையாக வைரஸ் பரவலை தடுக்காது. எனவே சமூக இடைவெளியுடன் இருப்பதுதான் ரொம்ப ரொம்ப அவசியம். ஆனால், பஸ்களில் சமூக இடைவெளி சுத்தமாக கிடையாது எனும்போது கொரோனா பரவலை குறைப்பது எப்படி? இந்த பஸ் பயணம் தமிழகத்தில் கொரோனா பரவலை மிகவும் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அல்லவா இருக்கிறது.

    வழிகாட்டுதல் தேவை

    வழிகாட்டுதல் தேவை

    ஒரு பொது இடத்துக்கு சென்றால், நடுவே ஒரு இருக்கையை காலியாக விட்டுவிட்டு, இரு பக்கமும் அமரும் வசதிகள் செய்யப்படுகிறது. ஆனால் பஸ்சில் அனைத்து சீட்டுகளிலும் முந்தியடித்து உட்காருவதோடு, நின்று கொண்டேவும் மக்கள் பயணிக்கிறார்கள். உரசியபடியே பயணிக்கும் சூழலில்தான் ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் செல்கிறார்கள். இப்போதெல்லாம் விமானங்களில் கூட இப்படித்தான் நடு சீட்டை காலியாக விடுவதில்லை என்கிறார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், மக்கள் ஆபத்தை அறியாமல், பயணத்தை தொடர்கிறார்கள். அவசரம், பணித் தேவைகளை தவிர்த்து அநாவசியமாக மக்கள் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், காலியான பஸ்களை பயன்படுத்துவதும், முடிந்தால், சொந்த வாகனங்களை பயன்படுத்துவதும்தான், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையிலாவது கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க உதவும் என்பதை மக்கள் உணர வேண்டும். அரசும், இப்படி நெருக்கடியான கூட்டத்துடன் பஸ்களை இயக்காமல், பஸ் நிலையங்களில் மக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+