Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலா விசாவில் தாய்லாந்து விமானத்தில் சென்னை வந்த டூரிஸ்ட்.. அந்த சாப்பாடு பார்சலை பிரித்தால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்லாந்து விமானத்தில் வந்த பயணி மீது திடீரென ஏர்போர்ட்டிலிருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.. எனவே அவரது நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்தனர்.. பிறகு அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.. அப்போதுதான் அதிகாரிகள் அரண்டுபோய்விட்டார்கள்.. . இது தொடர்பான விசாரணையையும் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?

வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை கடத்தும் சம்பவங்கள், நம்முடைய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல்களை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோதிலும், தினுசு தினுசான கடத்தல்கள் நடந்தபடியே உள்ளன.

Chennai Thailand Food Parcel

இதற்கெல்லாம் காரணம், உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகம் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இப்படி கடத்தி வந்து, கள்ளசந்தையில் விற்க நேரிடுகிறது.. கிலோ கணக்கிலான தங்கத்தை விமானங்கள் அல்லது கப்பல் மூலமாக கடத்திவிடுவதாலும் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.

தங்கம், வெள்ளி கடத்தல்கள்

அதனால்தான், தங்க கடத்தலை ஒழிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை செயல்படுகின்றன.. இதற்கு பிறகு தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைக்கவும், கடத்தல் சம்பவங்களும் மெல்ல குறைய துவங்கின.

எனினும் கடத்தல்களின் நூதன வடிவங்கள் தொடர் கதையாகிவிட்டன.. இதோ இப்போதும் ஒருவர் எசகுபிசகாக சிக்கியிருக்கிறார்..

தாய்லாந்து ஃபிளைட்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் பயணிகள் விமானத்தில், ஏராளமான போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படியே, நேற்று அதிகாலை, சம்பந்தப்பட்ட விமானம், சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறது.. உடனே சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணி விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, திரும்பி வரும்போது, வடமாநிலத்திற்கு செல்லாமல் சென்னைக்கு வந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததால், அவரை நிறுத்தி விசாரித்தார்கள்.. ஆனால், அந்த நபர் அதிகாரிகள் கேள்வி கேட்டதுமே உளற துவங்கினார்.

பாக்கெட் பாக்கெட் உணவுப்பொருட்கள்

இதனால் அந்த பயணியை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அவர் கொண்டு வந்திருந்த உடைமைகளையும் சோதித்தனர். அதற்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்கள் நிறைய இருந்தன.

இதனால் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, அதிகாரிகள் ஆடிப்போனார்கள்.. காரணம், அவற்றில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.. கிட்டத்தட்ட 10 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி என்கிறார்கள்..

பார்சலில் ரூ.10 கோடி

போதைப்பொருள் கடத்தும் கும்பல் ஒன்று, இவரை கூலிக்காக தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைத்து, கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததும், சென்னை ஏர்போர்ட்டில் கஞ்சா கடத்தும் கும்பலை சேர்ந்த மற்றொரு வடமாநில பயணியிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு, அவருக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுத்து அனுப்ப இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணியை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.. மேலும், இவரிடம் கஞ்சாவை வாங்கிச் செல்ல வந்த கடத்தல் நபர் யார் என்றும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+