தாய் பத்திரம் இல்லாமல் நிலம் வாங்கலாமா? அசல் ஆவணம் இல்லாவிட்டால் என்ன செய்வது.. இதோ ஸ்மார்ட் மூவ்
சென்னை: ஒரு நிலத்தின் ஆணிவேராகக் கருதப்படும் தாய் பத்திரம் இல்லாமல் அந்த நிலத்தை வாங்குவது என்பது அஸ்திவாரம் இல்லாத ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்குவதற்கு சமமாகும்.. அப்படியிருக்கும்போது தாய் பத்திரம் இல்லாமல் நிலம் வாங்கலாமா? என்ன ஆபத்து? தாய் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற சந்தேகங்கள் பலருக்கும் எழலாம்.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
ஒரு சொத்து பல கைகள் மாறி வரும்போது அதன் ஆரம்பகால உரிமையாளரிடம் இருந்து தற்போது விற்பவர் வரை ஏற்பட்ட அனைத்து உரிமை மாற்றங்களையும் உறுதிப்படுத்தும் சங்கிலித் தொடரே இந்த தாய் பத்திரம் ஆகும்..

தாய் பத்திரம்
இந்த பத்திரம் இல்லாத பட்சத்தில் நீங்கள் வாங்கும் நிலம் எதிர்காலத்தில் சட்ட ரீதியான சிக்கல்களையும் கடுமையான பொருளாதார இழப்புகளையும் உங்களுக்குத் தரக்கூடும் என்பதால் இதில் அதீத கவனம் தேவைப்படுகிறது..
தாய் பத்திரம் இல்லாமல் ஒரு நிலத்தை வாங்கும்போது அதன் உரிமையாளரின் உண்மையான அதிகாரம் குறித்து உங்களுக்கு பெரும் சந்தேகம் எழும்.. அந்த நிலத்தின் மீது ஏற்கனவே யாராவது கடன் வாங்கியிருக்கலாம் அல்லது அந்த நிலம் வாரிசுதாரர்களுக்கு இடையிலான நீதிமன்றப் பிரச்சனையில் சிக்கியிருக்கலாம்..
சொத்து அடமானம்
இந்த உண்மைகளை மறைத்து உங்களிடம் அந்த நிலம் விற்கப்பட்டால் பிற்காலத்தில் அந்த நிலத்தின் மீது உரிமை கோரி எவராவது வந்தால் சட்டப்படி உங்களால் அந்தச் சொத்தை முழுமையாகப் பாதுகாக்க முடியாமல் போகும்..
மேலும் ஒரு வங்கியானது முறையான தாய் பத்திரம் இல்லாத பட்சத்தில் அந்த நிலத்திற்கு கடன் வழங்க எப்போதும் முன்வராது என்பதால் எதிர்காலத்தில் நீங்கள் அந்த நிலத்தை விற்க முற்படும்போது அதன் மதிப்பு வெகுவாகக் குறையும்.. பல நேரங்களில் ஒரு சொத்து அடமானத்தில் இருக்கும்போது தான் அதன் அசல் பத்திரம் வங்கியில் இருக்கும் என்பதால் அந்த தகவலை மறைத்து விற்பவர்கள் தாய் பத்திரம் காணவில்லை என்ற பொய்யான காரணத்தைச் சொல்லவும் வாய்ப்புள்ளது..
வில்லங்க சான்றிதழ்
ஒருவேளை உங்களுக்கு அந்த நிலம் மிகவும் பிடித்துவிட்டது ஆனால் தாய் பத்திரம் மட்டும் இல்லை என்ற நிலையில் நீங்கள் சில முக்கியமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்..
முதலில் சம்பந்தப்பட்ட நிலத்தின் கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழை எடுத்து அதில் எந்த விதமான சட்ட சிக்கலோ அல்லது அடமானமோ இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.. ஆனால் வில்லங்கச் சான்றிதழ் மட்டும் முழுமையான பாதுகாப்பை அளிக்காது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.. எனவே அந்த நிலத்தின் முந்தைய உரிமை வரலாறும் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்..
முன்னணி நாளிதழ்கள்
அதன் பிறகு அந்த நிலத்தின் உரிமையாளர் மூலமாக அந்த பத்திரம் காணாமல் போனது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளிக்கப்பட்டு அதற்கான ரசீது மற்றும் "கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற சான்றிதழைப் பெற வேண்டும்..
இது மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் இரண்டு முன்னணி நாளிதழ்களில் அந்த தாய் பத்திரம் தொலைந்துவிட்டது என்றும் அந்த நிலத்தை வாங்க நான் ஒப்பந்தம் செய்துள்ளேன் என்றும் ஒரு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும்.. இந்த அறிவிப்பு வெளியான பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்..
தாய் பத்திரம் - நம்பகத்தன்மை
மேற்கண்ட நடைமுறைகளுக்குப் பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அந்தத் தாய் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை பெற்று அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.. ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் சான்றளிக்கப்பட்ட நகல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய தகவல்..
இருந்தாலும், இந்த நகல் பத்திரம் ஓரளவிற்கு பாதுகாப்பை தந்தாலும் அது அசல் பத்திரத்திற்கு நிகராகாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்..
தவறான ஆவணம்
எனவே ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை கொண்டு நிலத்தின் அனைத்து முந்தைய ஆவணங்களையும் விரிவாக ஆய்வு செய்வது உங்கள் பணத்தை பாதுகாக்கும்..
தாய் பத்திரம் இல்லாத சொத்துகளில் முதலீடு செய்வது என்பது ஒரு வகையான சூதாட்டம் போன்றது என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவசரப்பட்டு முன்பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும்.. உங்கள் கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணம் ஒரு தவறான ஆவணத்தால் வீணாகிவிடாமல் இருக்க சட்டப்பூர்வமான அனைத்து பாதைகளையும் ஆராய்ந்து நிலத்தை வாங்குவதே பாதுகாப்பானது..!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications