இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம்! இன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வு ஒத்தி வைப்பு!
டெல்லி: நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையோர பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தொடங்கி மே 14 ஆம் தேதி வரை பட்டயக் கணக்காளருக்கான சிஏ தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது.
ஆனால் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து இணை செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பட்டயக் கணக்காளர்கள் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். சிஏ இறுதி தேர்வு, இன்டர்மீடியேட் தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது போல் பஞ்சாப், ராஜஸ்தானில் பள்ளிகள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications