Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு முஸ்லிமாவது.. தலை தலையா அடிச்சிக்கிட்டாரே அன்வர் ராஜா.. எடப்பாடியின் "சிஏஏ பல்டி".. இதான் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஏஏ சட்டத்துக்கு அன்று கூட்டணியிலிருந்து ஆதரவு தந்த அதிமுக, இன்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் நிலைப்பாடு, தமிழக அரசியலில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்த போகிறது? இதன்மூலம் இஸ்லாமிய வாக்குகளை அதிமுகவால் பெற முடியுமா? என்ற ஆர்வமும், எதிர்பார்கப்பும் தமிழகத்தில் எழுந்துள்ளது.

அன்று முதன்முதலில் சிஏஏ விவகாரம் தலைதூக்கியபோது, அசாம் மாநிலத்தில் மட்டுமே தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், இந்தியா முழுவதுமே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டதுமே, நாட்டு மக்களிடம் அதிருப்தியும், அதிர்ச்சியும் வெகுண்டு கிளம்பியது.

CAA amendment act and edappadi Palanisamy condemns C A A what did AIADMK say about BJP 12-03-24

அமைதி: பொது சிவில் சட்டம் தொடர்பாக, ஆரம்பத்தில் எந்த பதிலையும் அதிமுக அன்று சொல்லவில்லை.. பெருத்த அமைதியையே காத்து வந்தது.. இன்னும் சொல்லப்போனால், கடந்த தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என்று கூறியிருந்ததே அதிமுகதான்.

ஆனால், திடீரென இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டது.. அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த மசோதாவை எதிர்த்து 105 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.. அதிமுகவின் இந்த முடிவுதான், இஸ்லாமியர்களிடையே பெருத்த அதிருப்தியை தந்துவிட்டதாக அப்போதே கணிக்கப்பட்டது.

அன்வர் ராஜா: முக்கியமாக, இந்த பிரச்சனை குறித்து, அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா, சற்று அதிகமாக எடப்பாடியிடம் எச்சரித்து வந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

"மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து கொண்டிருக்கிறது" என்று அன்வர் ராஜா கொந்தளித்தார்..

"இந்த சட்டத்தை, அதிமுக உடனடியாக எதிர்க்க வேண்டும்.. அப்படி எதிர்த்தால், நடந்து வரும் போராட்ட எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில், அதிமுக நீங்காத இடத்தை பெறும்" என்றும் அன்வர் ராஜா அப்போது வலியுறுத்தியிருந்தார்.

அதிமுக அலட்சியம்: ஆனாலும், அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் யாருடைய பேச்சையும், அதிமுக மேலிடம் அப்போது பரிசீலிக்கவில்லை என்றார்கள்.. அத்துடன், நாடாளுமன்றத்திலேயே அதிமுக ஆதரவு தந்திருந்ததுடன், சட்டமன்றத்திலும், இதுகுறித்து அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

"தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்படுறாங்கனு சுட்டிக்காட்டுங்க. நாங்க அதுக்கு பதில் சொல்றோம். யாரு பாதிச்சிருக்கா? விளக்கம் சொல்லுங்க. யாரும் பாதிக்கப்படவில்லை.. ஒரு இஸ்லாமியராவது இங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? " என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்ததை இந்த நாடு அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

விளக்கம்: இப்படிப்பட்ட சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு, பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டது அதிமுக.. அத்துடன் சிஏஏவுக்கு ஏன் அன்று ஆதரவு தெரிவித்தோம் என்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமி விளக்கம் தந்திருந்தார்.

"அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான ஆட்சியை தந்துள்ளது. கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம்.. எங்களுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம்" என்ற விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி சொன்னதுமே, திமுக கொந்தளித்து வந்தது.

"சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஆளுநரைச் சந்தித்து இஸ்லாமியர் சிறைவிடுதலை குறித்து அழுத்தம் தர அதிமுகவினர் தயாராக இருக்கிறார்களா?" என்று கேட்டு ஸ்டாலின் எடப்பாடிக்கு "செக்" வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில், நேற்றைய தினம் சிஏஏ சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. இதற்கு வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இந்த சிஏஏ சட்டத்தை எதிர்த்து, நாட்டு மக்களுடன் இணைந்து போராடவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால், சிஏஏ கொண்டுவரப்பட காரணமே அதிமுகதான் என்று முதல்வர் ஸ்டாலின் இப்போதும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.

எடப்பாடியின் இந்த திடீர் கண்டனம் குறித்து, நாம் சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னபோது, "அதிமுகவுக்கு இஸ்லாமியர்களிடம் அன்றைய தினம் ஏற்பட்ட சரிவுதான், இன்றுவரை நீடித்து வருகிறது.. ஈரோடு இடைத்தேர்தலின்போதுகூட, பாஜக தலைவர்களை அருகில் சேர்க்காமலேயே பிரச்சாரத்தை அதிமுக செய்திருந்தது.

பாஜக திட்டம்: சிஏஏ என்றில்லாமல், வேளாண் சட்டமாகட்டும், காவிரி விவகாரட்டும், நீட் தேர்வு, 8 வழிச்சாலை போன்றவற்றிலும் அதிமுகவின் நிலைப்பாட்டை இந்த தமிழகமே பார்த்து வருகிறது. "கொள்கை வேறு கூட்டணி வேறு" என்று இவர்கள்தானே சொல்கிறார்கள்? அப்படியானால், பாஜக கொண்டுவந்த திட்டத்திற்கெல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து ஆதரவு தந்ததை தவறு என்று ஒப்புக் கொள்கிறார்களா?

நெய்வேலி விவகாரத்தில் திடீரென அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதே? ஏன்? கூட்டணி காரணத்தை சொல்லி தங்களுடைய நிலைப்பாட்டை அதிமுக வேண்டுமானால் உடனுக்குடன் மாற்றிக் கொள்ளலாம்.. ஆனால், இந்த மாற்றத்தை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா? அதுவும் உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா? அப்படியே ஏற்றாலும், அவையெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறுமா?

யாருக்கு ஆதரவு: இஸ்லாமிய மக்களில் அதிமுகவுக்கு, தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் ஓட்டுப்போட்டு வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. ஆனால், இந்த சட்டம் கொண்டுவந்தபோதே, ராஜ்யசபாவில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்திருந்தால், இந்த சட்டம் அப்போதே தோல்வி அடைந்திருக்குமே.. இன்று எடப்பாடி கண்டனம் தெரிவித்துகூட என்ன பயன்?" என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுகவுக்கு, எப்போதுமே, பெண்களின் வாக்குகள் அதிகமாக இருந்து வருவதை போலவே, இஸ்லாமிய ர்களின் வாக்குகளும் திமுகவுக்கு கணிசமாகவே இருந்து வருகிறது.

கிளைமேக்ஸ்: அப்படியிருக்கும்போது, சிறுபான்மையினர் வாக்குகளை, பெருவாரியாக அள்ள போகிறவர்கள் யார்? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்து வருகிறது... தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், "சிஏஏ" விவகாரத்தை மத்திய பாஜக சீண்டிவிட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறதென்றே தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+