Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஏஏ தமிழ்நாட்டுக்கானது இல்லையே..முதல்வர் ஸ்டாலினை வசைபாடிய சுப்பிரமணியன் சுவாமி..எக்ஸில் பரபர பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முதல்வர் முக ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் தமிழக அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

CAA is for Kashmir and North east not for Tamil Nadu Subramanian Swamy slams TN CM MK Stalin

ஸ்டாலினை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி: மேலும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த பாட்டோம் எனக்கூறிய முதல்வர் முக ஸ்டாலினை, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், "Stupid.. குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார். அதோடு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஸ்டாலின் கூறியதாக வெளியான செய்தியையும் தனது எக்ஸ் தளத்தில் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம்: கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நேற்று அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் மத்திய அரசு அறிவித்தது. அப்போதே சிஏஏவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் கூறும் போது, மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு: நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல;

பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

இதன் காரணமாகத்தான், திமுக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+