மோடியின் புதிய அமைச்சரவை.. இணை அமைச்சர் டூ கேபினெட் அமைச்சர்.. யார் அந்த ஏழு பேர்? முழு விவரம்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் ஏழு இணை அமைச்சர்கள் அமைச்சர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்த போது, மொத்தம் 53 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று முதல்முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

43 பேர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். புதிய அமைச்சரவையில் 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது உள் துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

Array
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமலின் மகன் அனுராக் தாகூர். 46 வயதான இவர், இமாச்சல் பிரதேசத்தின் ஹமீர்பூர் தொகுதியில் 2008ஆம் ஆண்டு முதல் எம்பியாக உள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சராக இவர் இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முகமாக அறியப்படுபவர் கிரண் ரிஜிஜு. 49 வயதாகும் இவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அருணாச்சல பிரதேசத்தின் எம்பியாக உள்ளார். இதற்கு முன் உள் துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக (விளையாட்டுத் துறை) இருந்த இவர் தற்போது அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Array
66 வயதான பார்ஷோட்டம் ரூபாலா, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சராக உள்ளார். இவரும் தற்போது அமைச்சராக்கப்பட்டுள்ளார். அதேபோல முன்னாள் ஐ.ஏ.எஃப் அதிகாரியான ஆர்கே சிங் தற்போது அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். அவர் 2014ஆம் ஆண்டில் பீகாரின் அர்ரா தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தற்போது மின்சார துறை இணை அமைச்சராக உள்ளார்.

Array
வெளிநாட்டு தூதராக இருந்து அரசியல்வாதியானவர் ஹர்தீப் சிங் பூரி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனி பொறுப்புடன் கூடி இணை அமைச்சராக (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர், சிவில் விமான போக்குவரத்து) இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனி பொறுப்புடன் கூடிய இனை அமைச்சராக(கப்பல் துறை) உள்ள மன்சுக் எல் மாண்டவியாவுக்கும் தற்போது அமைச்சராக்கப்பட்டுள்ளார். 49 வயதான அவர், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளவர்களுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications