Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோல்வியில் முடிந்த 'உதான்' திட்டம்? அப்போ அந்த ரூ.1,089 கோடி? வெளியான சிஏஜியின் ஷாக் ரிப்போரட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை சாத்தியமாக்கிட ரூ.1,089 கோடி செலவில் 'உதான்' திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் வெறும் 7 சதவிகித வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

விமான பயணம் என்பது சாமானிய மக்களுக்கு பெரும் கனவாக இருந்தது. இந்நிலையில் இந்த கனவை நிஜமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு புதிய யோசனையை முன்வைத்தது. அதாவது சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்துவது என்பதுதான் திட்டத்தின் நோக்கம். இதற்கு உதான் திட்டம் என்றும் பெயரிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் வேலூர், சேலம், ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

CAG reports that only 7% of the routes are operated under Udhan Air Service Scheme

இதேபோல நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்குவதுதான் திட்டத்தின் நோக்கம். இதற்காக மத்திய அரசு ரூ.1,089 கோடியை செலவிட்டது. ஆனால், இந்த திட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் 93 சதவிகிதமான வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்றும் வெறும் 7% வழித்தடங்களில் மட்டுமே விமானம் இயக்கப்பட்டிருக்கிறது எனவும் மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் மட்டுமே தற்போது வரை விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள மூன்று மாவட்டங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சாமானியர்களும் இனி விமானங்களில் பயணிக்கலாம். குறைந்த கட்டணத்தில் விமான சேவை இருக்கும் என்று சொல்லப்பட்டது. மூன்று கட்டங்களாக நாடு முழுவதும் இந்த திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதில் முதல் கட்டத்தில் 132 வழித்தடங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 228, மூன்றாம் கட்டத்தில் 305 வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டது. இப்படியாக மொத்தம் 774 வழித்தடங்களில் விமானங்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் இதில் தற்போது வரை 54 வழித்தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 403 வழித்தடங்களில் கடைசி வரை விமான சேவை தொடங்கப்படவே இல்லை. முதல் கட்டத்தில் 371 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல இதில் சிறு நகரங்கள் என்று அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் எந்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறதோ அந்நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கியது. இப்படியாக 112 நகரங்களில் இயக்கப்பட்ட விமானங்களுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மானியம் நிறுத்தப்பட்ட பின்னர் 112 நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமான சேவை வெறும் 54 வழித்தடங்களாக சுருங்கியது. தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. எனவே இது தோல்வியடைந்த திட்டம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+