இதெல்லாம் தேவையா? இந்தியர்களை குறி வைத்துவிட்டு.. கடைசியில் மெக்சிகோ மக்களிடம் தோற்ற அமெரிக்கா!
சென்னை: அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு திணிக்கப்பட்ட நிலையில், இந்திய சமூகம்தான் அமெரிக்காவில் அமைதியான சமூகம் என்பதை நிரூபித்து உள்ளது.
இந்தியர்களின் உணவு மிக மோசமானது. அதை சாலை ஓரங்களில் சத்தமின்றி சமைக்கின்றனர். இந்தியர்கள் சாலை ஓரம் மலம் கழிக்கிறார்கள். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை.

அமெரிக்கர்கள் இருக்க வேண்டிய இடங்களை இந்தியர்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இந்தியாவை அவர்களால் முன்னேற்ற முடியவில்லை. இதனால் அமெரிக்கா வந்து எங்கள் நாட்டை கெடுக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் பல கமெண்ட் செய்து வருகின்றனர்.
மெக்சிகோ சமூகம்
ஆனால் இந்தியர்கள் மூலம் சிக்கல் சிக்கல், அமெரிக்கர்களுக்கு மெக்சிகோ மூலமே சிக்கல் அதிகம் என்பதை அங்கு நடக்கும் சம்பவங்கள் நிரூபித்துள்ளன. அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கலிபோர்னியா மாகாணத்திற்கும், அதன் மேயருக்கும் - அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான மோதலாக வெடித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பென்டகன் 700 மரீன் வீரர்களை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு ட்ரம்ப்தான் காரணம் என்று புகார் வைத்துள்ளது.
கலவரத்திற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE), லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை குறிவைத்து பல அதிரடி சோதனைகளை நடத்தியது. இதற்கு பதிலடியாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கலிபோர்னியாவின் முக்கிய இடங்களில் கூடினர். அமைதியாக தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. இதை செய்வது மெக்சிகோ மக்கள்தான்.
ட்ரம்ப் வெளியிட்ட சமீபத்திய குடியேற்ற நெறிமுறைகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குடியேற கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சோதனைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பணியிட சோதனைகள் மற்றும் விரைவான நாடு கடத்தல் உத்தரவுகள் அடங்கும். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக மெக்சிகோவை சேர்ந்த மக்கள்தான் இங்கே அதிகம் போராடி வருகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ், காம்ப்டன் மற்றும் பாரமவுண்ட் நகர மையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ், வெளியுறவு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். 101 நெடுஞ்சாலையை மறிப்பது, வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது, வேமோ கார்கள் கூட எரிக்கப்பட்டன, கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களால், லாஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 700 மரீன் வீரர்கள் கலிபோர்னியா உள்ளே அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாரத்தின் மத்தியில் வீரர்களின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications