வீட்டு மனை, நிலப்பத்திரம்.. தமிழக பத்திரப்பதிவில் மாற்றம்.. பதிவுத்துறை வைத்த புதிய டார்கெட்? வாவ்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை தமிழக பதிவுத்துறை செய்து வருகிறது.. இந்நிலையில், ஒரு புதிய தகவல் கசிந்து வருகிறது.
தமிழகத்தின் பதிவுத்துறையை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கினை நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக கிடைக்கும் வருமானம், தமிழக அரசுக்கு பிரதான நிதி ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.

நிதியாண்டு: கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் பத்திரப்பதிவு வாயிலாக, 17,296 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இதையடுத்து, 2023 - 24 நிதியாண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில், இந்த 2024ம் வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கினை நிர்ணயித்திருக்கிறது.
இந்த இலக்கை எட்டும்வகையில், பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வாரி வழங்கி கொண்டிருக்கிறது.. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஓரளவு பலன் கிடைத்து வருவதுடன், இந்த வருவாயில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
பிப்ரவரி மாதம்: கடந்த பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, 18,000 கோடி ரூபாயை தாண்டி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் மட்டும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்ட வேண்டிய நிலை பதிவுத்துறைக்கு ஏற்பட்டது.. தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததால், பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கையில் சற்று சரிவு ஏற்பட்டுவிட்டதாக இதற்கு காரணம் சொல்லப்பட்டது..
இப்படிப்பட்ட சூழலில்தான், பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார்... துறையின் பணிகளை ஆய்வு செய்ததுடன், பத்திரப்பதிவு வருவாயை உயர்த்தவும் பல புதிய முயற்சிகளை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.
புதிய இலக்கு: அந்தவகையில், பதிவுத்துறையின் வருவாய் இலக்கை, நிர்ணயிக்கப்பட்டதைவிட, இன்னும் கூடுதலாக எட்டிப்பிடிக்கவும், இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்பவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது..
சந்தை நிலவரப்படி ரியல் எஸ்டேட் துறையில், வர்த்தக மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இந்த இலக்கினை பதிவுத்துறை நிச்சயம் எட்டிப்பிடிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். வருவாய் இலக்கை எட்ட சார் - பதிவாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதால், பதிவுத்துறை துரிதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications