Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் அஸ்திவாரம்? அதிமுக இறங்கி வருகிறதா? அச்சாரம் போடுவதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா? பலே எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்று கூறியிருக்கும் சில கருத்துக்கள், மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன் சில விவாதங்களையும் எழுப்பி வருகிறது.

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அதிமுக 32 இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. இதில், 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

Edappadi Palaniswami ADMK AIADMK BJP SP Velumani

தோல்விகள்: நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆகமொத்தம் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது.. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஒருவேளை, பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து கூறியிருந்தார்.. எஸ்பி வேலுமணி இப்படி பேசியது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுக: போதாக்குறைக்கு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையோ, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, எஸ்பி வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக தெரிகிறது என்று கூறியிருந்தார்.. இதனால், அதிமுக வட்டாரத்தில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது.. இந்நிலையில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, சில கருத்துக்களையும் கூறியிருக்கிறார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, "அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.. பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது.. அதேபோல, எனக்கும் வேலுமணிக்கும் பிரச்சனை என்று திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி நடக்கிறது.

அண்ணாமலை: பாஜக ஜனதாவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார்.. அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.. கடந்த முறையைவிட, இந்த முறை தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியின் இந்த பேட்டியானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறதாம்.. குறிப்பாக , தேர்தல் தோல்வியானது, அதிமுகவிலுள்ள பாஜக ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்து வருவதுடன், பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பலமுறை எடுத்து சொல்லியும், எடப்பாடி பழனிசாமி கடைசிவரை, தங்கள் பேச்சை கேட்கவில்லையே? என்று ஆதங்கத்தில் உள்ளார்களாம்.

அதிருப்திகள்: அதனால், எடப்பாடிக்கு எதிரான அதிருப்திகளும் முளைத்திருப்பதாகவும், அவைகளை சரிக்கட்டவே எடப்பாடி இன்றைய தினம் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றார்கள்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ, எடப்பாடி பழனிசாமி மிக சரியாகவே இன்று பேசியிருக்கிறார் என்று ஆதரவு தருகிறார்கள்.. "பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதிலிருந்தே, அண்ணாமலையை விமர்சித்து வருகிறதே தவிர, இதுவரை மேலிட பாஜகவை விமர்சித்தது இல்லை..

பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என்று நேரடியாகவே டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களிடம் புகார் சொல்லியும், மாநில தலைமை மாற்றப்படவில்லை.. இந்த வருத்தம் அதிமுகவுக்கு இருக்கவே செய்தது என்றாலும், தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவை அவ்வளவாக விமர்சிக்கவில்லை. திமுகவையே பிரதானமாக குற்றஞ்சாட்டி வாக்குகளை எடப்பாடி பழனிசாமி கேட்டாரே தவிர, எந்தஒரு பாஜக மேலிட தலைவரையும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டவில்லை.

கூட்டணி முறிவு: அதுமட்டுமல்ல, கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலை மட்டும்தான் காரணம் என்பதை அதிமுக தொடர்ந்து சொல்லி வந்தநிலையில், இப்போதும், கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று மட்டுமே சொல்கிறது.. எனவே, அண்ணாமலை மட்டும்தான் அதிமுகவுக்கு அன்றும் இன்றும் நெருடலாக இருக்கக்கூடிய ஒரே விஷயமாகும்.

அந்தவகையில், எடப்பாடியின் எண்ணத்தைதான், வேலுமணியும் வெளிப்படுத்தியிருக்கிறார்.. ஒருவேளை, பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் 35 சீட்களை கைப்பற்றி இருப்போம் என்று சொல்லி, மீண்டும் கூட்டணிக்கு தொண்டர்களையும் தயார் செய்யும் யுக்தியாகவும் இது இருக்கலாம்.

அதிருப்திகள்: அப்படியே கூட்டணிக்கான அஸ்திவாரமாகவே இது கருதப்பட்டாலும், மூத்த தலைவர்கள் முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் இதனை ஏற்பார்களா? என்றும் தெரியாது" என்கிறார்கள்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+