இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இருப்பினும், சென்னையை சேர்ந்த மா.செக்கள் சிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று மதுராந்தகத்தில் நடக்கும் தவெக விழாவில் அக்கட்சியில் இணைகின்றனர்.

ஏற்கனவே அதிமுகவின் முக்கிய புள்ளிகள் தவெகவில் இணைந்துவிட்டனர். இப்படி இருக்கையில் அடுத்தடுத்து மாவட்ட அளவில் நிர்வாகிகள் தவெகவுக்கு படையெடுத்து வருவது அதிமுகவை பலவீனப்படுத்தியிருக்கிறது.

TVK Targets AIADMK

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கடந்த 60 ஆண்டு காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகளை தவெக ஓரம் கட்டியிருக்கிறது. இதில் அதிமுகவுக்குதான் பெரிய அடி விழுந்திருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது, கூட்டணி பெரிய அளவில் கை கொடுக்காதது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் தேர்தலுக்கு பிறகும் கூட, அதிமுகவிலிருந்து பலரும் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், சிட்டிங் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவியிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருந்தனர். இதனையடுத்து இன்று மதுராந்தகத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியின் பெயர் என்னவோ மாற்றுக்கட்சியினர் இணையும் விழாதான். ஆனால், உண்மையில் அதிமுகவினர்தான் அதிக அளிவில் இன்று தவெகவில் இணைய இருக்கின்றனர்.

இதில், அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்கள் சிலர் தவெகவுக்கு ஜம்ப் அடிக்க இருக்கின்றனர். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமியை ரொம்பவும் அப்செட் ஆக்கியிருக்கிறது.

இருப்பினும் தவெக இத்துடன் நிற்கவில்லை. கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால், அதிமுகவிலிருந்து இணைந்த மாவட்ட செயலாளர்களை வைத்து, அக்கட்சியில் உள்ள ஒன்றிய, கிளை நிர்வாகிகள் வரை தவெகவில் இணைக்க கட்சி தலைமை திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தைதான் இன்று மதுராந்தகத்தில் எக்சிகியூட் செய்ய இருக்கிறது.

மதுராந்தகம் என்பது முதல் ஸ்டெப்தான். இது வெற்றி பெற்றுவிட்டது எனில், அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் கிளை அளவில் கட்சியை வலுப்படுத்த தவெக தலைமை திட்டமிட்டிருக்கிறது. எனவே விரைவில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா மாநிலம் முழுவதும் சூடுபிடிக்கும். இது எடப்பாடி பழனிசாமிக்குதான் பெரிய பின்னடைவு.

அதிமுக மட்டும் கிடையாது.. வேறு எந்த கட்சியாக இருந்தாலும் கிளை அளவில் அதன் இயக்கம் வலுவாக இருக்கும் வரைதான் அதற்கு பலம். ஆனால், கிளை பலத்தை கட்சி கைவிடுகிறது எனில், அக்கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதிர்க்காலம் இருக்காது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+