திமுகவுடன் தொடர்பா? அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? மீண்டும் மீண்டும் சீறும் காயத்ரி ரகுராம்!
சென்னை: நான் திமுகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் அண்ணாமலை, அதனை நிரூபிக்க தயாரா என்று முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். அதேபோல் கடைசி வரை தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்று காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார். திருச்சி சூர்யா சிவாவைத் தொடர்ந்து காயத்ரி விலகிய நிலையில், சூர்யா சிவாவை போலவே காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு
சொந்த கட்சியினரையே வார் ரூம் மூலம் அண்ணாமலை செய்வதாகவும், பாஜகவில் பெண்களுக்கு பாதிகாப்பில்லை என்று பல்வேறு விமர்சனங்களை கூறினார். பாஜகவில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும், சொந்த கட்சி நிர்வாகிகளையே மோசமாக பேசுவதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

அண்ணாமலை வாழ்த்து
இந்த நிலையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், காயத்ரி ரகுராம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகியவர்கள் பற்றி கவலையில்லை. காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

காயத்ரி ரகுராம் பதிலடி
அதுமட்டுமல்லாமல், காயத்ரி ரகுராம் திமுகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார். அதேபோல் காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கும் எந்த பதிலும் கூறவில்லை. பின்னர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், காயத்ரி ரகுராம் எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணாமலையிடம் எந்த பதிலும் இல்லை. அதேபோல் பெண்கள் பாதிக்கப்படுவது பற்றியும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

விலகல் கடிதம்
அதுமட்டுமல்லாமல் திமுகவுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டை வைக்கிறார். அதனை அண்ணாமலை நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், திருச்சி சூர்யா சிவாவின் விலகல் கடிதத்தையே இதுவரை ஏற்காத நிலையில், எனது விலகல் கடிதத்தை அண்ணாமலை எப்படி ஏற்பார். கட்சியில் இருந்து என்னை விரட்டியடிப்பது மட்டுமே அண்ணாமலையின் குறிக்கோள். அதுமட்டுமல்லாமல், நான் இதுவரை அண்ணாமலைக்கு விலகல் கடிதத்தையும் அனுப்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications