இந்த உலகத்தில் யாராவது உறுதி தர முடியுமா? செந்தில் பாலாஜி வழக்கில்.. நீதிபதி கேள்வி.. எல்லாம் ஓவரா?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் நேற்று பேசிய நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு ஒரு நபர் எந்தக் குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் எப்படி வர முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி வழக்கு: இதனிடையே, செந்தில் பாலஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார்.
பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை: அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 19வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.
சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.
"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, சிறைக்குள் இருக்கும் போது, இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
நேற்று மீண்டும்: இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நேற்று மீண்டும் விசாரித்தார். இதில் அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவர் இப்படி மறைவாக உள்ள நிலையில் எப்படி செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வர முடியும்.
அவர் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை எப்படி ஜாமீனுக்கு காரணமாக சொல்ல முடியும். அதை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது. காலம் கடக்கிறது என்றால்.. வழக்கை துரிதப்படுத்தலாம். அவர் ஒரே காரணத்தை வைத்து மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும்.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை முடிக்க வேண்டும். விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று வாதம் வைத்துள்ளனர் .
நீதிபதி கேள்வி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் நேற்று பேசிய நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு ஒரு நபர் எந்தக் குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் எப்படி வர முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
வாதங்களின் போது, நீதிபதி வெங்கடேஷ் கூறுகையில், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் பிரிவு 45, குற்றம் சாட்டப்பட்டவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி அடையாத வரையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறுகிறது.
மேலும், ஜாமீன் வழங்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் இருக்கும்போது எந்த குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்பதில் நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும் என்றும் சட்ட விதி கூறுகிறது. ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் எந்த குற்றமும் செய்ய மாட்டார் என்று எந்த நீதிமன்றமும் எப்படி முடிவுக்கு வர முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.
ஒரு நபர் எந்தக் குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்று உலகில் யாராவது சொல்ல முடியுமா? என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். வெளியே சென்று யாரையாவது திட்டினால் அதுவே குற்றமாகும். எனவே, பிரிவு 45 இன் இந்த இரண்டாவது பிரிவு என்னை எப்போதும் தொந்தரவு செய்கிறது. உண்மையிலேயே கடினமான விஷயம் இந்த பிரிவுதான், என்று நீதிபதி குறிப்பிட்டார்.
அதாவது, ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜி எந்தக் குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் எப்படி வர முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications