Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகிய "தாமரை" மொட்டு.. பாஜகவை புட்டு புட்டு வைத்த மைதிலி வினோ.. 310 கோடியா.. எகிறி குதிக்கும் திமுக

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மைதிலி வினோ யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை திமுக குஷியில் திளைத்து வரும் நிலையில், ஒட்டுமொத்த கொங்கு மண்டல பாஜகவும் கொந்தளிப்பில் உள்ளது.. இதற்கு காரணம், மைதிலி வினோ? யார் இவர்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது... திமுகவின் வெற்றிக்கு தென் மண்டலம் முக்கிய காரணமாக இருந்ததாக பார்க்கப்பட்ட நிலையில், கொங்கு மண்டலம் முற்றிலுமாக கை விட்டது.

குறிப்பாக, கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திமுகவின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. குறைந்தபட்சம் 20 தொகுதிகளையாவது இங்கு பெற்றிருக்க வேண்டும், மிஸ் ஆகிவிட்டதே என்று முதல்வர் ஸ்டாலின், பதவியேற்ற புதிதில் நெருக்கமானவர்களிடம் அடிக்கடி வருத்தப்பட்டதாக சொன்னார்கள்.

 விரட்டுங்கள்.. விரட்டுங்கள்..

விரட்டுங்கள்.. விரட்டுங்கள்..

அதற்கு பிறகுதான், அதிமுகவின் கோட்டையான கொங்குவை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற உறுதியையும் எடுத்தார் ஸ்டாலின்.. இறுதியில், செந்தில் பாலாஜியிடம் கொங்கு அசைன்மென்ட் தரப்பட்டது.. அப்போது முதல் இறங்கி வேலை செய்தார் செந்தில்பாலாஜி.. "கரூர் ஆட்களை விரட்டுங்கள்" என வானதி சீனிவாசனும், எஸ்பி வேலுமணியும் தேர்தல் ஆணையத்திடம் புகாரை எடுத்துக் கொண்டு ஓடும் அளவுக்கு களப்பணியாற்றினார் செந்தில் பாலாஜி.. இறுதியில் அதற்கான பலனையும் திமுக, உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்தது.

 தோப்பு வெங்கடாசலம்

தோப்பு வெங்கடாசலம்

அதன் தொடர்ச்சியாக, மாற்று கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கும் வலைவிரிக்கப்பட்டது.. வேறு கட்சி அதிருப்தியாளர்களை, திமுகவுக்கு இழுத்து வருவது என்ற மிகப்பெரிய பொறுப்பும் செந்தில்பாலாஜியிடம்தான் தரப்பட்டது.. அந்தவகையில், தோப்பு வெங்கடாசலம் முதல் எத்தனையோ அதிமுக புள்ளிகள், திமுக பக்கம் வந்துள்ளனர்.. இப்போதும் சிலர், திமுகவுக்கு வரப்போகிறார்கள்.. கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், திமுகவில் இணையவுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்... அவர்களில் ஒருவர் மைதிலி வினோவும் என்று சலசலக்கப்பட்டு வருகிறது.

 மைதிலி வினோ

மைதிலி வினோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை மைதிலி வினோ நேரில் சந்தித்து பேசியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்தான், திமுகவில் அவர் இணைவதாக செய்திகள் கசிகின்றன.. இதனிடையே, மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவையடுத்து, பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம பாலாஜிக்கு மைதிலி வினோ ஒரு கடிதம் எழுதியுள்ளார்... அந்த கடிதத்தை தன்னுயை சோஷியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.. தன்னை பற்றின முழு விவரத்தையும், மனக்குமுறல்களையும் கொட்டி உள்ளார்.

 கோவை திமுக

கோவை திமுக

அதன்விவரம் இதுதான்: "நான் 22 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தேன்... என்னுடைய கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினேன். சமீப காலமாக பாஜக மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லை. இதன் காரணமாக கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டேன். இரண்டு தினங்களுக்கு முன்பாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து திமுகைவில் இணையும் முடிவை எடுத்தேன்.

 களங்கம் + பாஜக

களங்கம் + பாஜக

இன்றைய தினம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாலும் என்னை கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விட்டுள்ளீர்கள். நான் என்ன களங்கம் விளைவித்தேன்???
களங்காமல் கட்சிக்காக உழைத்து வந்ததால் இதனை கூறியுள்ளீர்களா??? பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

என்னை போன்று கட்சிக்காக உழைத்து இன்று மாவட்ட தலைமையால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர். பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு மிகவும் முக்கியமானது. இதனை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தாங்கள் பாஜகவிற்கு புதியவர். வந்த உடனேயே மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன? என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 310 கோடியா??

310 கோடியா??

ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால் நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா??? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையில் இருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது??? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு?? கட்சியின் செயல்பாடுகள் உண்மை தொண்டனுக்கு தெரிவதில்லை. கட்சியின் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு கட்சியினருக்கு தகவல் அளிக்காமல் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறீர்கள்.

 தாமரை + மொட்டுக்கள்

தாமரை + மொட்டுக்கள்

உண்மையான பாஜகவினர் தகவல் வராமல் வீட்டிலிருக்கும் போது பாஜக நிகழ்ச்சிகளில் கூலிக்கு வருபவர்கள் நின்றிருக்கிறார்கள். இதை கேட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ளவரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை. தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர்.

 மொட்டு கருகியது

மொட்டு கருகியது

எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம் என்று குறிப்பிட்டுள்ளார்... மைதிலியின் இந்த கடித விவகாரம் கோவை பாஜகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது... மற்றொருபுறம், கொங்கு திமுக செம குஷியில் இருக்கிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் ஒருபக்கம் வந்தாலும், பாஜக குறித்து ஊழல் புகார்களை இவர் கிளப்பி விட்டு போயுள்ளது, விஸ்வரூபமெடுத்துள்ளது.. அதேசமயம், இத்தனை நாளும் பாஜகவில் இருந்த இவர், ஏன் அப்போதே இந்த விவரங்களை எல்லாம் மாநில தலைமையிடம் தெரிவிக்கவில்லை? ஒரு கட்சிக்கு சேர முடிவு செய்யும்போதுதான், ஏற்கனவே இருந்த கட்சியின் குறைபாடுகள் தெரியவருமா? என்றும் கேள்விகள் எழுகின்றன.. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து, பாலாஜி உத்தம ராமசாமியிடம் கேட்டதற்கு, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. அவர் திமுகவில் இணைய உள்ளதால் இந்த மாதிரியான தவறான தகவல்களை பரப்பி வருகிறார்" என்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+