அசௌகரியத்தில் பாஜக லீடர்.. "கொஞ்சம் கமலாலயத்துக்கு வர முடியுமா?".. அசராத சிபிசிஐடி.. இதெல்லாம் நிஜமா
சென்னை: தமிழக பாஜகவின் அடுத்தடுத்த பிளான்கள், அரசியல் களத்தை சூடாக்கி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், நமக்கு ஒரு பிரத்யேகமான செய்தி கிடைத்திருக்கிறது.
இன்னும் லோக்சபா ரிசல்ட் வரவில்லை.. ஆனால், அதற்குள் தமிழக பாஜக சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்புகளில் இறங்கிவிட்டது.. அதிலும் மாநில தலைவர் அண்ணாமலை ஒருபடி மேலே போய், ஆலோசனை கூட்டத்தையும் அடிக்கடி நடத்த துவங்கியிருக்கிறார். இன்றுகூட, கட்சி நிர்வாகிகளின் கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.

தாமரை: அப்போது நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேசும்போது, ''ஜூன் 4ம் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள். பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். தாமரை அடர்ந்து, படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்கு பின் அனைவரும் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு, வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது '' என்று அண்ணாமலை சொன்னதுமே, ஒட்டுமொத்த அரங்கமும், கரகோஷம் எழுப்பியது.
ஏற்கனவே 400 இடங்களை வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வரும்நிலையில், சட்டசபைக்கான களப்பணிகளையும் இப்போதே பாஜக கையில் எடுத்துள்ளது, பல கட்சிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
நயினார் நாகேந்திரன்: அதேசமயம், தமிழக பாஜகவில் சில சங்கடங்களும் நிலவுவதை மறுக்க முடியாது.. குறிப்பாக, தேர்தல் சமயத்தில் நெல்லைக்கு கொண்டு செல்ல முயற்சித்த 4 கோடி ரூபாய் விவகாரம் பாஜக தரப்பினை விடாமல் சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்துதான் நமக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி கிடைத்திருக்கிறது.
அதாவது, இந்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர், கோவர்த்தன் உள்ளிட்டவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. ஆனால், அதற்கு ஆஜாராகாமல் தவிர்த்து வருவதுடன் கால அவகாசம் கேட்டுள்ளனர். இந்த நிலையில், 4 கோடி தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல் செய்தார் கேசவ விநாயகம்.
விசாரணை தடை: நீதிபதி சரவணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முதல் தகவல் அறிக்கையில் கேசவ விநாயகத்தின் பெயர் இல்லாததால் ரத்து செய்ய கோரிக்கை வைக்க இவருக்கு உரிமை இல்லை என சி.பி.சி.ஐ.டி தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணைக்கு தடை கொடுக்கவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி.யின் சம்மனுக்கு ஆஜராக வேண்டிய சூழல் கேசவ விநாயகத்துக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், "உங்கள் அலுவலகத்துக்கு வர எனக்கு அசௌகரியமாக இருப்பதால், தயவு செய்து பாஜக தலைமையகத்துக்கு வந்து விசாரிக்க இயலுமா?" என்று சிபிசிஐடி போலீசிடம் கேட்டிருக்கிறாராம் கேசவ விநாயகம்.
வேறு வழியில்லை: ஆனால், போலீஸ் தரப்பில் பாசிட்டிவ்வான பதில் வரவில்லை. இதனால், அப்செட்டாகியிருக்கிறாராம் கேசவ விநாயகம். இந்த நிலையில், "சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜராவதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம்.












Click it and Unblock the Notifications