பஞ்சு பஞ்சா தகறுதே.. ஸ்பாட்டுக்கே போக போகிறாராம் ஸ்டாலின்.. நொறுங்கும் சென்ட்டிமென்ட்.. மலைத்த பாஜக
ராமேஸ்வரத்தின் சென்ட்டிமென்ட்டை முதல்வர் ஸ்டாலின் தகர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறிவருகிறது
சென்னை: ராமேஸ்வரத்தில் திமுகவினர் மறுபடியும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. சுவர் விளம்பரங்களும், போஸ்டர்களும் அடிக்கடி திமுகவினரால் ராமேஸ்வரத்தில் ஒட்டப்பட்டு வருவதன் பின்னணி குறித்து சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதில் பாஜக படுதீவிரத்தில் உள்ளது.. வடமாநிலங்களில் வலுவாக இருந்தாலும், பாஜகவின் கோட்டை என சொல்லப்படும் சில மாநிலங்களில் சறுக்கல்களை கண்டு வருகிறது.
எனவே, வடமாநிலங்களில் விட்டதை, தென்மாநிலங்களில் வளைத்து பிடிக்க, வியூகம் அமைத்து வருகிறது.. அந்தவகையில், தமிழகத்தில் சற்று கூடுதல் கவனத்தை திருப்பி உள்ளது..

டபுள் ப்ளான்
அதனால்தான், சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் பரபரத்தன. தென்மாநிலங்களில் ஆன்மீகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில், பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்பவே, உத்தர பிரதேசத்தின் வாரணாசியிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. மோடியை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தால், கூடுதல் கவனம் பெறுவதோடு, பாஜக பலம் பெறவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று பாஜக தரப்பில் நம்பப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

ஒத்த ஓட்டு பாஜக
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் ரொம்ப மகிழ்ச்சி.. மோடி ஒருவர் மட்டுமே இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற தகுதி வாய்ந்தவர் என்று பாஜக சீனியர் தலைவர் எச்.ராஜா முந்திக்கொண்டு வந்து பெருமிதம் தெரிவித்தார்.. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான நிலையில், அதுவும் ராமநாதபுரத்தில் போட்டியிட போவதாக தகவல் கசிந்ததுமே, திமுக கூட்டணி கவனிக்க துவங்கிவிட்டது.. அதிலும் ஒருமேலே போன காங்கிரஸ், போஸ்டர்களையே அடித்து ஒட்டிவிட்டது..

கேரண்ட்டி
ராமேஸ்வரம் நகர் காங்கிரஸ் தலைவர் ஜோ.ராஜீவ் காந்தி, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து ராமேஸ்வரம் முழுவதும் அந்த போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.. அதில், "நிச்சயம் படுதோல்வி.. லட்சியம் நோட்டாவுடன் போட்டி.. ராமேஸ்வரத்தில் மண்ணைக் கவ்வுவது உறுதி. அதுக்கு நாங்க கேரண்டி... மோடி அவர்களே, மனசை தளர விடாம இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை... தரமா தோற்கடிப்பது எங்க கடமை... ஒத்த ஓட்டு பாஜக" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. இந்த போஸ்டர்கள் இணையத்தில் அப்போதே வலம்வந்து பலரையும் கவனிக்க வைத்தது.

வால் போஸ்டர்ஸ்
இப்போது மறுபடியும் திமுகவினர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் சுவர் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. அனைத்து கட்சி தலைவர்களும் ராமேஸ்வரம் வந்து சென்றாலும், ஆளுங்கட்சி தரப்பில் பெரிதாக யாரும் ராமேஸ்வரம் வருவதற்கு தயக்கம் காட்டி வருவதாக ஒரு பேச்சு எழுந்தது.. இதை நொறுக்கவே, முதல்வர் ஸ்டாலின், ராமேஸ்வரம் வந்து செல்ல பயண திட்டம் தீட்டப்பட்டது.. ஆனால், கீழடி அருங்காட்சியக பணி நிறைவடையததால், முதல்வர் வருகை அப்போது தள்ளிப்போனது..

தகருதா சென்ட்டிமென்ட்
எனவே, பிப்ரவரி 3வது வாரத்தில் முதல்வர் ராமேஸ்வரம் வரலாம் என்று கூறப்படுகிறது.. ஆனால், அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது திடீரென ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அங்கு களப்பணி ஆரம்பமாகி உள்ளது.. எனவே, இந்த முறையும் அவரது வருகை தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.. எனினும், முதல்வர் ஸ்டாலினை வரவேற்று இப்போதே திமுகவினர் சுவர் விளம்பரங்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர்..

சென்ட்டிமென்ட்
அதுமட்டுமில்லை.. கடந்த 50 வருடங்களில் ஆட்சியில் இருந்தபோது எந்த முதல்வரும் ராமேஸ்வரம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சென்ட்டிமென்ட்டைதான் ஸ்டாலின் உடைக்க போகிறார் என்கிறார்கள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ராமேஸ்வரம் நகராட்சியை திமுக கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது எம்பி தேர்தலுக்கும் திமுக மும்முரமாகி வருகிறது.. திமுக கூட்டணியின் இப்படிப்பட்ட ஒவ்வொரு நகர்வையும், மாவட்ட பாஜக, கூர்மையாகவே உற்று கவனித்து வருகிறது.. எனினும், 50 வருடமாக நிலவிவரும் சென்ட்டிமென்ட்டிற்கு முதல்வர் ஸ்டாலினின் வருகை முற்றுப்புள்ளியாக இருக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications