Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லகான்".. கையை பிசையும் ஓபிஎஸ்.. அங்கேயே கிளம்பி போறார் எடப்பாடி.. இதுக்கு நடுவில் டாக்டர் சரவணன் வேற

எடப்பாடி பழனிசாமியின் இன்றைய மதுரை வருகையானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் டீம் உச்சக்கட்ட குழப்பத்திலும், ஆலோசனையிலும் இறங்கி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் மதுரைக்கு செல்ல உள்ளார். இது அதிமுகவை கவனிக்க வைத்து வருகிறது.

பாஜக கேட்டுக் கொண்டதையடுத்து, ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை இடைத்தேர்தலில் வாபஸ் பெற்றுள்ளார்.. இரட்டை இலை எடப்பாடி தரப்புக்கு சென்றுள்ளது.. இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது..

அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருவதாக தெரிகிறது.

ஆஃப் செய்த எடப்பாடி

ஆஃப் செய்த எடப்பாடி

இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட எல்லா வியூகங்களும், ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்த எடுத்து கொண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது.. ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்வதற்காக மட்டும்தான்.. "கூட்டணி" என்று பெயரை பேனரில் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்கொள்வதற்காகத்தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இப்போது இரட்டை இலையை தாங்கள் பெற்றுவிடவும், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எடப்பாடி டீம் ஆரம்பித்துவிட்டது.. அதுமட்டுமல்ல, சட்டரீதியான விஷயங்களில் ஓபிஎஸ் வலுவாக இருந்தாலும், களத்தில் கோட்டை விட்டுவிட்டார், எனவே, ஓபிஎஸ் டீமில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவவும் கூடும் என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன.

 மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

ஆனால், இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு போனதால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உட்பட பலரும் சொல்லி வருகிறார்கள்.. இது எங்களின் பெருந்தன்மை என்றும், மருது அழகுராஜ் போன்றோரும் பேட்டிகளை தந்து வருகிறார்கள்.. எனினும், அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஓபிஎஸ் டீம் இறங்கி உள்ளது.. இதுவரை, பிரச்சாரத்துக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைப்பும் விடுக்கவில்லை.. அவர் அழைப்பு விடுக்காதவரை, ஓபிஎஸ்ஸும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகப்போவதில்லை.

உதயகுமார்

உதயகுமார்

இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரைக்கு செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.. நெல்லையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்கிறார்... மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, கப்பலூரில் காலை 6 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட ம்,மேற்கு புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது... இந்த வரவேற்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி நெல்லை புறப்பட்டு செல்கிறார். அங்கு திருமண நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட எடப்பாடி மறுபடியும் மதுரை வருகிறார்.

சரவணன் அதிரடி

சரவணன் அதிரடி

பகல் 1.30 மணியளவில் தனக்கன்குளத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு, அங்கு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கொடியேற்றுகிறார். இணையும் விழா அதனைத்தொடர்ந்து மதுரை ரிங்ரோடு வலையங்குளத்தில், எம்எல்ஏ டாக்டர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் அதிமுகவில் இணையும் விழா நடக்கிறது... அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் சரவணன் அமர்க்களமாக செய்து இருக்கிறார்.

டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

கடந்த ஒரு வருட காலமாகவே தென் மண்டலத்தை வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. உதயகுமாருக்கு புதிய போஸ்டிங்குகளை தந்தும்கூட, நினைத்த அளவுக்கு ஆதரவை முக்குலத்தோர் மத்தியில் பெற முடியவில்லை.. எனினும், தற்போது இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ள சூழலில், மதுரைக்கு செல்வது மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், டாக்டர் சரவணன், தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கவும் இன்றைய கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள முனைவதாக தெரிகிறது.. ஏராளமான ஆதரவாளர்களை அழைத்து வந்து அதிமுகவில் இணைய வைக்க உள்ள நிலையில், சரவணனுக்கான முக்கியத்துவமும் எடப்பாடி டீமில் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நனவான கனவு

நனவான கனவு

முன்னதாக, அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்தை நனவாக்கும் வகையில், கழக பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலோடு அதிமுக சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும், அம்மா வழியில் சட்ட போராட்டம் நடத்தி, துரோகிகளின், விரோதிகளின் சதி செயல்களை முறியடித்து, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வெற்றியின் சின்னமான இரட்டை இலையை மீட்டெடுத்து, அதிமுகவின் மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும் வகையிலும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையிலும் இன்று மதியம் 1 மணிக்கு, திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள, கூத்தியார் கூண்டு பகுதியில் 51 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+