நொறுங்கிடுச்சே எல்லாம்.. எடப்பாடி பழனிசாமி, பன்னீரை சந்திக்காத மோடி.. கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.. அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், இது இரண்டுமே கடைசிவரை நடக்காமல் போய்விட்டது.. என்ன காரணம்?
பிரதமர் மோடியை சந்திக்கும் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியை உறுதி செய்து பேசியிருந்தார்.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிசெய்திருந்தார்.. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் இதில் மாறுபட்டே வருகிறார்.. அவரது தேர்தல் கணக்குகளும், வியூகங்களும் அதிமுகவுக்கு எதிரான மனநிலைமையை வெளிப்படுத்தினாலும், பாஜகவின் வளர்ச்சியை முன்னிறுத்துவதாகவே அமைந்து வருகிறது.
அலைக்கழிப்புகள்: காரணம், கடந்த 2019 தேர்தலில் 5 சீட்டுக்களையும், 2021தேர்தலில் 7 சீட்களையும் பெற்ற நிலையில், இந்த முறையில் டபுள் டிஜிட் சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்து வருகிறார்.. ஒருவேளை சீட் விவகாரத்தில் வழக்கம்போல் அலைக்கழித்தாலோ, அல்லது ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கினாலோ, தனி அணியாக நின்று களமாட வேண்டும் என்பதே அண்ணாமலையின் நிலைப்பாடாக உள்ளதாக தெரிகிறது.. ஒன்று தனித்து போட்டியிட வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த அதிமுக என்பது தவிர்க்க முடியாதது என்பதில் உறுதியாகவும் இருக்கிறார். அண்ணாமலை தன்னுடைய வியூகம் குறித்து அமித்ஷாவிடம் நேரடியாகவே விளக்கியிருந்த நிலையில், அந்த வியூகம் தவிர்க்கப்பட முடியாததாகவே கருதப்படுகிறது..
விபி துரைசாமி : அதாவது, அண்ணாமலை சொல்வதும் ஓரளவு சரிதானே என்பதுபோல மேலிடம் ஆமோதித்துள்ளது.. இதற்கு மூத்த தலைவர்கள் சிடி ரவி முதல் விபி துரைசாமி வரை ஆதரவுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. எனினும், அதிமுக மேலிடம் + அண்ணாமலை இடையே போதுமான இணக்கமான சூழல் நிலவவில்லை.. அமித்ஷாவே கூட்டணி குறித்து உறுதியாக சொன்னபோதிலும்கூட, அமித்ஷா சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்ற கருத்தை அண்ணாமலை சொல்கிறாரே தவிர, எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஏற்கவில்லை. அதேநேரத்தில் ஓபிஎஸ்ஸை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது என்று நினைக்கிறாராம் அண்ணாமலை.
தப்பு செஞ்சுட்டேனே: தமிழக பாஜக இப்படியான நிலைப்பாட்டில் உள்ள சூழலில்தான், பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.. இன்றைய தினம் பிரதமர் வருவதால், கடந்த 10 நாட்களுக்கு முன்பேயே அதிமுக பரபரப்பாகிவிட்டது.. வழக்கம்போல், இந்த முறை எடப்பாடி + ஓபிஎஸ்ஸை பிரதமர் சந்திப்பாரா? அல்லது இரு தரப்பினருமே எடப்பாடியை சந்திக்க முனைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. காரணம், "என்னை சமீபகாலமாக கண்டுகொள்ளாமல் பாஜக மேலிடம் ஒதுக்கிவிட்டது, அதிமுக கேஸில் அவங்களை ரொம்ப நம்பினேன், ஆனால், என்னை கைவிட்டுவிட்டது, தப்பு செய்துட்டேனே" என்று ஓபிஎஸ், சசிகலாவுக்கு போனை போட்டு பேசியதாக தகவல்களும் பரபரத்தன.. இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்திப்பாரா? என்ற சந்தேகம் கிளம்பியது.
நோ அப்பாயிண்ட்மென்ட்: நேற்றுகூட செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசியபோது, பிரதமர் மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் என்றுதான் கூறியிருந்தார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படியில்லை.. கூட்டணி உறுதி என்று அமித்ஷா எப்போது சொன்னாரோ, அப்போதே டெல்லி மேலிடத்துடன் அவருக்கான செல்வாக்கு அதிகரித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.. போதாக்குறைக்கு தம்பிதுரை வேறு, நிறைய சமாச்சாரங்களை அமித்ஷா, மற்றும் நட்டாவிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள்.. இது எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளதால், பிரதமரை சந்திக்க அதிக ஆர்வத்தை துவக்கத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தி வந்தார்.
எனினும், சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.. அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும் சொன்னார்கள்.. இரு தரப்புக்குமே பிரதமர் மோடி அப்பாயிண்மென்ட் தந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.. இரு தரப்பிலும் நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியை பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வரவேற்க போவதாகவும், அப்போது இரு தரப்புமே பேச உள்ளதாகவும் கூறப்பட்டது.. பிரதமர் மோடியை சந்திக்கும்போது, பொதுச்செயலாளர் பழனிசாமி, பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு எனத் தகவல் வெளியானது.

ஆக, வழக்கம்போல், இந்த முறையும் தனித்தனியாக 2 பேரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தென்பட்டது.. அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து பேச மொத்தம் 15 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 10 நிமிஷம்தான் பிரதமரை சந்திக்க டைம் தந்திருப்பதாகவும் கூறப்பட்டது.. ஆனால், இவை எல்லாமே இன்று நொங்கிவிட்டது.. அதாவது, சென்னை வந்த பிரதமரை, ஆளுநர், முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர்.
ஆனால், இருவரிடமும் பிரதமர் மோடி பேசவில்லை.. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.. நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் இதுகுறித்து அவர் சொல்லும்போது, "ஒருங்கிணைந்த அதிமுகவைதான் பாஜக எதிர்பார்க்கிறது.. சட்டப்போராட்டமும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.. இதெல்லாம் முடிவுக்கு வர இன்னும் 3 மாதமாவது டைம் எடுக்கும்... 2023- நம்பவர் அல்லது டிசம்பரில் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பு எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு இவர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் இறங்கலாம்.. இன்றைய தினம் இவர்களை பிரதமர் மோடி சந்தித்தாலும்கூட, பொதுப்படையாக எந்த விஷயத்தையும் பேச வாய்ப்பில்லை..
தனியாக யாரை சந்தித்து பேசினாலும் அது தேவையில்லாத நெருடலை தந்துவிடும்.. இதில், எடப்பாடியை தனியாக சந்தித்து பேசினாலும் அது பிரச்சனை ஆகிவிடும்.. ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனை.. கவர்னரை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனைதான்.. அண்ணாமலையையும் தனியாக சந்தித்தாலும் பிரச்சனை.. அதனால், மொத்த பேரையும் ஒன்றாக சந்தித்துவிட்டு, கிளம்பவே பிரதமர் மோடி நினைப்பாரே தவிர, தனித்தனியாக பேச வாய்ப்பே கிடையாது" என்றார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications