"கேம் சேஞ்ச்".. கைதாகிறாரா "வலது கை".. எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல 2 கத்தி தொங்குதே.. திமுக செக்?
எடப்பாடி பழனிசாமி தரப்பு 2 விதமான நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
சென்னை: விரைவில் சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், இதை எப்படி எதிர்கொள்வது என்ற இருவித மனநிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக அரசை கண்டித்து, இந்த சபைக்கூட்டத்தை புறக்கணிக்கலாமா? அல்லது புறக்கணித்துவிடுவதால், அது ஓபிஎஸ்ஸுக்கு ஒருவேளை சாதகமாக போய்விடுமோ? என்ற இருவித குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
திமுகவையும், ஓபிஎஸ்ஸையும் விடாமல் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இரு விதமான நெருக்கடிகள் கூடியுள்ளதாக சொல்கிறார்கள்..

PLAN 1
முதலாவதாக அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நெடுஞ்சாலை துறையின் புதுமுறைகேடு ஒன்று வெளியாக உள்ளதாம்.. காரணம், புதுக்கோட்டை பாண்டித்துரை தொடர்புடைய இடங்களில் கடந்த 3 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.. இந்த சோதனையில் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.. முதல்வராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..

PLAN 2
அதுமட்டுமல்ல, போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான டெண்டரும், இதே பாண்டித்துரைக்கே ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நிறுவனம் ஒன்று, பெரிய தொகையை மேலிடத்துக்கு தந்ததாகவும் தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வருவது, பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

டபுள் கேஸ்
அதேபோல, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளதாம்.. எனினும், இதுதொடர்பான வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால், இந்த கொடநாடு கேஸ் இழுபறியிலேயே இருந்து வருகிறது.. சிபிசிஐடிக்கு இந்த கேஸ் மாற்றப்பட்டு உள்ளதால், விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.. அநேகமாக தீபாவளிக்கு பிறகு, எந்த நேரத்திலும் எடப்பாடியின் "வலது கை" இளங்கோவன் கைதாகலாம் என்கிறார்கள்.. எடப்பாடிக்கு எதிரான சம்பவங்களும் இது தொடர்பாக வெளிவரும் என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.

மெகா பிளான்
அதேசமயம், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை யாராலும் எதுவும் செய்ய முடியாது, முக்கியமாக திமுக அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்காது என்கிறார்கள்.. சம்பவம் நடந்து 6 வருட காலத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தே ஒன்றரை வருட காலம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் வழக்கே பதியப்படவில்லை..ஆதாரமும் கிடைக்கவில்லை.. எனவே, கொடநாடு கேஸ் எந்தவிதத்திலும் எடப்பாடியை பாதிக்காது என்றே சொல்கிறார்கள். ஒருவேளை, எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது, வழக்குகள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், இது திமுக அரசு மீதே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பொருமல்கள்
இப்படி வழக்கு விசாரணைகள் ஒருபக்கம் மிரட்டிக் கொண்டிருந்தாலும், பாஜகவின் சமாதான முயற்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பணியாமலேயே உள்ளது, தொண்டர்களை சோர்வாக்கி விட்டதாம்.. எடப்பாடி பழனிசாமி மீது அடிப்படை நம்பிக்கை பாஜக மேலிட தலைவர்களுக்கு இல்லை என்பதால்தான், ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை அவர்கள் ஏற்க தயங்குகிறார்கள்.. இந்த நம்பிக்கை மேலும் சிதறும் பட்சத்தில், தனித்து களமிறங்கவும் பாஜக முடிவெடுக்கும், இரட்டை இலை சின்னம் கிடைக்க செய்யாமலும் செய்ய வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸை ஒதுக்கினால், அது தனக்குதான் நஷ்டம் என்பதை அறியாமல் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருகிறார் என்ற பொருமல்களும் வெடித்து வருகின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications