எடப்பாடியின் அதே "ரோஷம்".. பணிகிறதா பாஜக.. அதிர்ந்து பார்க்கும் கட்சிகள்.. கடைசிவரை "சாயாத" பழனிசாமி
சென்னை: அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்பது வானிலை அப்டேட் போல ஆகிவிட்டது.. திடீரென இணக்கமாகிறார்கள், திடீரென சுணக்கமாகிவிடுகிறார்கள்.. என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணிக்குள்?
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் நடைப்பயணம் ராமேஸ்வரத்தில் துவங்க உள்ளதால், இந்த நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அமித்ஷா தொடங்கி வைப்பதால், இந்த தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்பியது. அதன்படி, விழாவில் கலந்து கொள்ள 3 பேருக்குமே பாஜக தேசிய தலைமை அழைப்பு விடுத்த நிலையில், "அவசியம் கலந்து கொள்ள வருவேன்" என்று உறுதியளித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி தினகரன்: ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனையும் பாஜக தலைமை அழைத்திருக்கிறது என்கிற விஷயம், அதற்கு பிறகுதான், எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. இது தெரிந்ததும் அப்செட்டாகி உள்ளார். டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்தபோது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அவர்களை சேர்க்கக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியும், அவர்களை அழைக்கிறார்கள் என்றால், டெல்லிக்கு என்னதான் நினைக்கிறது? என்று வருத்தப்பட்டுள்ளார்.
க்ரீன் சிக்னல்: எதிர்பார்த்தபடியே, விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார்.. அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பழனிசாமியை அழைத்தபோதும், நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டாராம் எடப்பாடி.
அதிர்ச்சி: இந்நிலையில், இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதிமுக தரப்பில் நிர்வாகிகள் இதுகுறித்து சொல்லும்போது, எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார்.. ஆனால், அதேசமயம், அழைப்பு விடுத்திருப்பதால், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாராவது ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனினும் அதுகுறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.. அப்படி செல்வதானால், ஜெயக்குமார் அல்லது சிவி சண்முகம் இவர்களில் யாரையாவது அனுப்பி வைக்கலாம்.
ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது.. வரும் தேர்தலை மையப்படுத்திதான், இந்த நடைபயணத்தையும் அண்ணாமலை மேற்கொள்ள போகிறார். அப்படி இருக்கும்போது, அவரது தலைமையில் நடைபெறும் நடைபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்து கொண்டால், அது அதிமுகவுக்கு சறுக்கலாகிவிடும்.
அதிமுக + பாஜக: அதாவது, பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி ஏற்படுத்தும் என்று பிம்பம் மக்களிடம் ஏற்பட்டுவிடும்.. அதுவும் இல்லாமல், இன்னும் எந்த கட்சியுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. தேர்தலுக்கு நிறைய டைம் உள்ளதால், 8 மாதங்களுக்கு பிறகுதான் கூட்டணி முடிவு செய்யப்படும்.. அப்போது எங்கள் தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைப்போம். அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள்.
இதனிடையே, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு போயுள்ளது.. தேமுதிகவுக்கும் போயுள்ளது.. எனினும், இவர்களில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவானது, அமித்ஷா மற்றும் பாஜக தரப்பில் அதிருப்தியை தந்துள்ளதாம். அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது..
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் இதே பிடிவாதத்துடன் கடைசிவரை உறுதியாக நின்றால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் தானாகவே அதிமுகவுக்கு வந்து விழும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மற்றொருபுறம், திமுகவைவிட அதிக வாக்குவங்கியை வைத்துள்ள அதிமுகவின் ஓட்டுக்களை எப்படி சாதகமாக்கி கொள்ள போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
இதனிடையே, மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையிடம், பாதயாத்திரையில யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.
அண்ணாமலை: அதற்கு அண்ணாமலை, "சில பேர் வருகிறார்கள்... சில தலைவர்கள் அவர்கள் சார்பாக சில தலைவர்களை அனுப்பி வைப்பார்கள். சில தலைவர்கள் யாத்திரையின் வேறு வேறு நாட்களில் வந்து தலைமை விருந்தினர்களாக பங்கேற்பார்கள். நாளை நடக்க போகிறது தொடக்க விழா மட்டும் தான். 10 இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான தலைவர்கள் வருவார்கள். மத்திய கேபினட் அமைச்சர் சார்பாக ஒருவர் பங்கேற்க உள்ளார்.
நான் வருவேன் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட சொல்லவில்லை. அவரிடம் நான் போனில் பேசினேன். மருத்துவ சிகிச்சையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருக்கிறார். ஆனால், யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை நமது மாநிலத்தின் சார்பாக கரு நாகராஜன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த யாத்திரைக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். காரணம் பிரதமர் மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்" என்றார்.
எதிர்பார்ப்பு: ஆக, எடப்பாடி பழனிசாமி வரமாட்டார் என்பதை அண்ணாமலையே அறிந்துவைத்துள்ள நிலையில், எடப்பாடி சார்பாக யார் பங்கேற்க போகிறார்கள் என்பதுதான் தற்சமய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications