கிளீன் ஸ்வைப் திமுக? பாஜகவுக்கு ஷிப்ட் ஆனதா அதிமுக ஓட்டு? ஓட்டை எங்கே விழுந்தது? அதிரடியில் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், இப்போதும் சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.. அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகளை, தமிழக கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன.
மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்கு கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை மேற்கொண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

தோல்விகள்: ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பலரும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையே பெரும்பாலும் பதிவு செய்தார்களாம்.

BJP DMK Edappadi Palanisamy

வரிசையாக தேர்தல்களில் தோல்வி அடைந்துவிட்டோம்.. கூட்டணியும் பலமாக அமைத்து நாம் போட்டியிடவில்லை. அதனால், வரும் தேர்தலிலாவது, வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.. பிரிந்து சென்ற தலைவர்களையும் உள்ளே கொண்டுவந்தால்தான், திமுகவின் பலத்தை கட்டுப்படுத்த முடியும்" என்று ஆலோசனைகளை முன்வைத்தார்களாம்.. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அதற்கு வாய்ப்பே இல்லை என்று கறாராக கூறிவிட்டாராம்.

அறிவிப்பு: இப்படி பரபரப்பான சூழ்நிலையில்தான், ஆகஸ்ட் 9ம் தேதி அதாவது நாளைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே, அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அவசர செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
அதேசமயம், எதற்காக இந்த அவசர செயற்குழு கூட்டப்படுகிறது? என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

கொங்கு ஓட்டுக்கள்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அதிமுகவின் பிரதான வாக்குகளை, தமிழக பாஜக, நாம் தமிழர், திமுக கூட்டணி போன்ற கட்சிகள் பிரித்திருப்பதாக தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில், கொங்குவில் ஓட்டுக்களை, பாஜக கணிசமாக பிரித்துள்ளது, அதிமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துவிட்டதாம.

நேற்றைய தினமும் இதே வருத்தத்தை, மூத்த தலைவர் எஸ்பி வேலுமணியும் நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டாராம் .. அத்துடன், வரப்போகும் தேர்தலில் கொங்குவில் உள்ள ஓட்டுக்களை பிரிக்காமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார் எஸ்பி வேலுமணி.

வேலுமணி: "தொண்டர்களை மதித்தால், நமது வெற்றி எளிதாகும்" என்று கோவை அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது.. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

"கடந்த தேர்தலில் நம் தொண்டர்கள் அதிகம் பேர் களத்தில் இருந்தனர். ஆனால் இப்போது பல பூத்களில் குறைவான ஓட்டு பெற்று தோல்வியை தழுவியிருக்கிறோம்.. நாம் வெற்றி பெற்ற தொகுதியில்தான், இந்த நிலைமை என்பதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.

பொறுப்புகள்: கட்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமானோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.. கடந்த 10 வருடங்கள் நீங்கள் பரிந்துரைத்த, அத்தனை பணிகளையும் நான் செய்து தந்திருக்கிறேன்.. கோவையில் ஐம்பதாண்டு கால வளர்ச்சிப்பணிகளை செய்து தந்திருக்கிறேன்.. அப்படியிருக்கும்போது, நமக்கு விழ வேண்டிய ஓட்டுக்கள் எங்கே போனது? ஓட்டுக்கள் சிதறியது எப்படி? எங்கே ஓட்டை விழுந்தது? என்பதை ஆராய வேண்டும்.

எப்படி ஓட்டு வராமல் போனது என்று, நிர்வாகிகள் அத்தனை பேரும் பதில் சொல்லியாக வேண்டும்... ஒவ்வொரு ஓட்டும் நமக்கு இனிமேல் வந்தாக வேண்டும்.. பெரும்பாலானோர் மாவட்ட பொறுப்பில் இருக்கிறீர்கள்.. ஆனாலும் என்ன பலன்? தோல்விக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.. இந்த தோல்வியை பாடமாக ஏற்றுக்கொண்டு, களப்பணி மேற்கொள்ள வேண்டும். களப்பணி மேற்கொள்ளும் தொண்டர்களை, மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்... இதற்கு பூத் பொறுப்பாளர்களை முதலில் நம்ப வேண்டும்.

கூட்டணி: இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகு, நாம் பேசியே ஆக வேண்டும் என்பதால்தான் இப்படி பேசுகிறேன். ஓட்டுக்கள் சிதறக்கூடாது... கூட்டணியை பற்றி கவலைபடாதீங்க.. அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கவனமாக இருங்கள்.. ஒவ்வொருவரும் இறங்கி சென்று மக்களை சந்திக்க வேண்டும். எந்த சூழலிலும் யாரையும் ஒதுக்கக்கூடாது.

நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள், அறங்காவலர்கள் அரசு சாரா பொறுப்புகளில் நீங்கள்தான் பொறுப்புக்கு வருவீர்கள். அதனால் பணிகளை துரிதப்படுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டாராம் மூத்த தலைவர் வேலுமணி.

எதிர்பார்ப்பு: அதிமுகவின் மேலிட தலைவர்கள் தற்போது, நாலாபக்கமும் சுழன்று களப்பணியில் இறங்கியிருப்பதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அதிமுகவில் விரைவில் நடக்க போகும் அவசர கூட்டமும் அதிக ஆர்வத்தை கிளப்பி விட்டு வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+