தூள் தூளாக சிதறிய கனவு.. மோடியின் "அந்த" ஒற்றை வார்த்தை.. எடப்பாடியின் பிளானே வேறயாமே.. அப்ப ஓபிஎஸ்?
எடப்பாடி பழனிசாமியின் மெகா பிளான் ஒன்றை வகுத்து வருவதாக கூறப்படுகிறது
சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்துபோன நிலையிலும், பாஜகவின் நிலைப்பாடும் சரி, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமும் சரி, அதே போலவே உள்ளதாகவும், ஒருதுளி கூட இரு தரப்பிலும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஒன்றுபட்ட அதிமுகவை மட்டுமே பாஜக மேலிடம் அன்றுமுதல் இப்போது வரை விரும்புகிறது.. அதேசமயம், தன்னுடைய விருப்பத்தை நேரடியாகவும் அதிமுகவுக்கு தெரிவிக்க முடியாது.
காரணம், ஒருகட்சி விவகாரத்தில் மூக்கை நுழைப்பது போலாகிவிடும் என்பதால், மறைமுகமான அழுத்தத்தையும், விருப்பத்தையும் தெரிவித்து வருகிறது.

பிடிவாதம்
இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிப்பதால், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையும் தீராமல் உள்ளது.. நேற்றைய தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்பப்பட்டது.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, மேலிடத்துக்கு விசுவாசமானவர் என்பதால் பெரிய அளவுக்கு நெருக்கடி இல்லாமல் உள்ளார்.. கடந்த மாதமே டெல்லி சென்று பிரதமரையும், அமித்ஷாவையும் சந்தித்து ஓபிஎஸ் பேசப்போவதாக, அவரது ஆதரவாளர் வைத்திலிங்கமும் சொல்லியிருந்தார்.. ஆனால், டெல்லிக்கு ஓபிஎஸ் கடைசிவரை செல்லவில்லை.. இதற்கான காரணமும் தெரியவில்லை.. அந்தவகையில், நேற்றைய தினம் மதுரை வரும் மோடியை எப்படியும் சந்தித்து பேசிவிடுவது என்று நம்பிக்கையோடு இருந்தார் ஓபிஎஸ்.

தாமரைகள்
அதேபோல, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, கடந்த மாதம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோதிலும், மோடியை சந்திக்க முடியவில்லை.. இதற்காக டெல்லி லாபியிடம் பல்வேறு வகையில் முயற்சித்தும் அந்த சான்ஸ் கிடைக்கவில்லை.. இது ஒருவகையில் எடப்பாடிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டும் வந்தது.. எனவே, மதுரை வரும் மோடியை சந்தித்து பேசி, தன் தரப்பு நியாயத்தையும் எடுத்து வைக்கலாம் என்றே நம்பிக்கையோடு இருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கான அப்பாயிண்ட்மென்ட்டையும் கேட்டு வந்தார்.

அப்பாயின்ட்மென்ட்
ஆனால், கடைசிவரை, இவர்கள் 2 பேரையும் அழைத்து மோடி பேசவேயில்லை.. இவர்கள் பஞ்சாயத்திலும் தலையிடவில்லை.. அப்பாயின்ட்மென்டையும் தரவில்லை.. கடந்த முறை போலவே, ஏர்போர்ட்டில் வரவேற்கவும், வழியனுப்பவும் இவர்கள் 2 பேரும் போய் நிற்கும்படி ஆகிவிட்டது.. அந்தவகையில், ஒருங்கிணைந்த அதிமுக என்பதையே, அழுத்தமாகவும், வெளிப்படையாகவும் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி.. ஏர்போர்ட்டில் இவர்களுக்கு இடையில் சில அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்... இதைப்பார்த்த பிரதமர், தனித்தனியாக நின்ற எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும் சேர்ந்து வருமாறு சொல்ல, வேறவழியில்லாமல் 2 பேரும் சேர்ந்து மோடியை வரவேற்றுள்ளனர்.. அதை மகிழ்ச்சியுடன் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

"சேர்ந்து வாங்க"
"சேர்ந்து வாங்க" என்று சொன்னதே எடப்பாடி தரப்புக்கு இன்னொரு சறுக்கலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. எப்படி தினகரனை கட்சிக்குள் சேர்த்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாரோ, அதுபோலவே ஓபிஎஸ் விஷயத்திலும் கறார் காட்டி வருகிறார்.. எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இருவரும் என்னதான் கணக்கு போட்டுள்ளார்கள் என்பது குறித்து சிலரிடம் விசாரித்தோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதுதான்:

இணக்கம் + நெருக்கம்
பாஜக இல்லாமலேயே கூட்டணி என்பதைதான், எடப்பாடி டீமில் உள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. கடந்த முறை தேர்தலில் சறுக்கலை அடைந்ததற்கு, மக்களிடமிருந்த பாஜக எதிர்ப்பு மனநிலைதான் காரணம் என்றும், அதனாலேயே அந்த ஓட்டுக்களை சீமான் தட்டிச்சென்றதாகவும் சொல்லப்பட்டது.. அதுவும் தென்மாவட்டங்களில்தான் சீமான், பாஜக, அதிமுக வாக்குகளை அறுவடை செய்துள்ளார்.. எனவே பாஜக அல்லாத கூட்டணியை அமைக்கவே முயன்றுள்ளதாகவும், அதைதான் நாசூக்காக மெகா கூட்டணி என்று பறைசாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் விஷயத்தில் கட்டாயப்படுத்தாமல், அதேசமயம், பாஜகவே இணங்கி வந்து, கூட்டணி வைத்தால் அதற்கு இணங்கிவிடுவது அல்லது ஓபிஎஸ் விஷயத்தில் கட்டாயப்படுத்தினால், தனித்து களம் காண்பது என்ற இரு வகையான முடிவில் எடப்பாடி உள்ளதாக சொல்கிறார்கள்.

கால்குலேஷன்
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, மேற்கு மண்டலத்தில், எடப்பாடியை பழனிசாமி ஆதரவினை காலி செய்யக்கூடிய அளவுக்கு மேற்கு மண்டலத்தில் ஓபிஎஸ் தன்னுடைய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.. இதனால், மேற்கு மண்டலஆதரவை விரைவில் பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்.. எப்படியும் பாஜக கைவிடாது என்பதாலும், பாஜக கூட்டணியில் தன்னைஇணைத்துக் கொள்ளும் என்பதாலும், பெருத்த நம்பிக்கையுடன் இருக்கிறார்..

ப்ளஸ் பாயிண்ட்
அதாவது, அதிமுகவில் இணைய சொன்னாலும் அது தனக்கு பிளஸ்தான், அல்லது பாஜகவில் இணைத்து கொண்டாலும் அதுவும் தனக்கு பிளஸ்தான் என்று கணக்கு போடுகிறார். எப்படி பார்த்தாலும், சசிகலாவை பாஜக மேலிடம் முன்னிறுத்தாது என்பதால், அதுவும் தனக்கு பிளஸ் என்றே நினைக்கிறார்.. எப்படி பார்த்தாலும், பாஜக அல்லாத கூட்டணிக்கு எடப்பாடி ரெடியாவது போலவே, ஓபிஎஸ்ஸும் ஒருவித கணக்கில் உள்ளார்.. ஆக மொத்தம், இவர்கள் 2 பேரும் இணைவது அந்த அளவுக்கு சாத்தியமில்லை" என்கிறார்கள்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications