1 சொல்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த எடப்பாடி.. அதுவும் லைம்லைட்டில் இருந்துட்டே.. மலைக்கும் கமலாலயம்
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வேகம் எடுத்து வருவதுடன், பாஜகவை கலங்க வைத்தும் வருகிறதாம்
சென்னை: பாஜக அதிருப்தியாளர்கள் நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இணைந்து வரும் நிலையில், கூட்டணியின் நிலைப்பாடு கேள்விக்குறியாகி வருகிறது.. அத்துடன் இரு தரப்பிலுமே நிர்வாகிகள் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பிவிட்டு வருகிறது.
சமீபகாலமாகவே பாஜக - அதிமுக இரு தரப்பும் மோதல் போக்கை கொண்டுள்ளன.. இவர்களுக்குள் என்ன நடந்தது என்றே இதுவரை உறுதியாக தெரியவில்லை.. எதற்காக பாஜக அதிருப்தியாளர்கள், மாநில தலைமை மீது கோபப்பட்டுக் கொண்டு, எடப்பாடி பக்கம் தாவினார்கள் என்றும் தெரியவில்லை..
இதனால், இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. கண்டன போராட்டம் போஸ்டர் கிழிப்பு, ஈபிஎஸ் படம் எரிப்பு என இரு தரப்புமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அட்வைஸஸ்
எப்போதும் இல்லாத அளவுக்கு செல்லூர்ராஜு ஒருபடி மேலே போய், "வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு" என்று மாநில தலைமையை கடுமையாக விமர்சித்துவிட்டார்.. நேற்றைய தினம் கடம்பூர் ராஜு "கத்துக்குட்டி" என்ற வார்த்தையை பயன்படுத்தி அதே பாஜக மாநில தலைமை மீதான கோபத்தை வெளிப்படுத்தி விட்டார்.. இத்தனைக்கும் பாஜக பற்றியும், பாஜக தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று எடப்படி பழனிசாமி 4 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், நிர்வாகிகளின் காட்டமான பேச்சு தொடர்ந்து வருகிறது.. அதிலும், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருவது கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் நிலையை உருவாகியுள்ளது. எனவே, பாஜகவின் பதிலடியும் தொடர்கிறது..

கத்துக்குட்டி
2 நாட்களுக்கு முன்பு, திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலினை விமர்சித்ததைவிட, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுதான் அதிகமாக இருந்ததும் உற்றுநோக்கப்பட்டது.. நேற்றையதினம், "அரசியலில் அண்ணாமலை போன்றவர்கள் கத்துக்குட்டி, அவரால் தான் பாஜக அழிந்துக் கொண்டிருக்கிறது" என்று கடம்பூர் ராஜூ சொன்னதுமே, பின்னாடியே வந்து பதிலடி தந்தார் தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் துணைத்தலைவருமான நாராயன் திருப்பதி.

நாராயண் திருப்பதி
"காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள்" என்று காட்டமாக பதிலடி தந்துள்ளார். இப்படி இரு தரப்பு மோதல்களும் தினம் தினம் வெடித்து கிளம்பி வரும்நிலையில், இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன? அதிருப்திகள் வெடிக்க யார் மூலக்காரணம்? என்ற சந்தேகங்களும் வலம்வந்தபடியே உள்ளன..

டீம் டீம்
மற்றொருபக்கம், எடப்பாடி பழனிசாமியின் அரசியல், தலைகீழாகி மாறிவருவதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. "தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான்" என்று அண்ணாமலை பேச துவங்கியபோதே, பாஜக மீதான கடுப்பு எடப்பாடி டீமுக்கு அதிகமாகிவிட்டதாம்.. அதுவும் கடந்த இடைத்தேர்தலின்போது, ஆதரவு தராமல், 10 நாட்களுக்கும் மேலாக அண்ணாமலை இழுத்தடித்துவிட்டதும், அலைக்கழித்துவிட்டதும் எடப்பாடி தரப்பை மேலும் டென்ஷனாக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக, "ஒருங்கிணைந்த அதிமுக" குறித்து விடாமல் அண்ணாமலை பேட்டி தந்து கொண்டிருப்பதும், எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை அதிகப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள்.

கனவு கோட்டை
திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே எடப்பாடியின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி நகர ஆரம்பித்ததை டெல்லி பாஜக உணராமல் இல்லை.. ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் அல்லாத அதிமுகவுக்கு தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் 2 வருட கனவாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருவதாக தெரிகிறது. இதெல்லாம் தெரிந்தும்கூட, ஒருங்கிணைந்த பாஜக என்ற விஷயத்தில், பாஜக உறுதியாக இருப்பதுதான், வேறுவிதமான அரசியலை கையில் எடுக்க முனைந்துள்ளாராம் எடப்பாடி..

முருகா முருகா
அதன் ஒருபகுதியாகவே, பாஜகவிலிருந்து ஆட்களை இழுத்து வருகிறார் எடப்பாடி.. இனியும் பாஜகவில் இருந்து நிறைய அதிருப்தியாளர்கள் எடப்பாடி பக்கம் வரக்கூடும் என்கிறார்கள்.. இதற்கு நடுவில், தினகரன் தரப்பில் இருந்தும் நேற்றைய தினம் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கி உள்ளார்.. இதன்மூலம், நான்தான் உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்பதை நிரூபிக்க முயல்வதாகவும் தெரிகிறது.. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தராஜன் போன்றோர் மாநில தலைவர்களாக இருந்தபோதுகூட, இந்த அளவுக்கு பாஜகவில் இருந்து வெளியேற்றம் நிகழ்ந்தது இல்லை.. எல்.முருகன் பொறுப்பில் இருந்தபோதுகூட, இவ்வளவு அதிருப்தியாளர்கள் காணப்படவில்லை.. இப்போது அதிருப்தியாளர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்?
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications