"முட்டுச்சந்து".. வெட்ட வெளிச்சமாயிடுச்சே.. பாஜக பற்றி எடப்பாடி ஏன் அப்படி சொல்றாரு.. இதான் காரணமாம்
அன்வர்ராஜா, முனுசாமியால் அதிமுகவின் ஓட்டுக்கள் சிதறுகின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
சென்னை: திமுகவின் எதிர்ப்பு என்பது மட்டுமே அதிமுகவுக்கு போதுமா? அப்படியான எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் ஒருங்கிணைப்பதுதானே ராஜதந்திரம்.. ஆனால், சொந்த வாக்கு வங்கியையே பலவாறாக சிதைத்து கொண்டிருக்கும்போது, எப்படி வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்றைய தினம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.. சட்டப்போராட்டங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்.. கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக்கொள்ளும். கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.. அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம்..

தகரும் கணக்கு
பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. மெகா கூட்டணி என்று ஒருபக்கம் பேசினாலும், பாஜக குறித்து எடப்பாடி சொன்ன கருத்து, பலராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. 2வது முறையாக மெகா கூட்டணி என்ற வார்த்தையை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி உள்ளார்.. பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாரா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மெகா கூட்டணி மற்றும் பாஜக குறித்து அவர் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்..

வைகைச்செல்வன்
"பாஜக எங்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் தந்ததில்லை என்று வைகை செல்வன் சொல்கிறார்.. அப்படியானால், கடந்த 2017-ல் இரு அணிகளையும் இணைத்தது யார் என்று அனைவருக்குமே தெரியுமே.. பிரதமர் கேட்டுக் கொண்டதால்தான், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இணைந்தேன் என்று ஓபிஎஸ்ஸே சொல்லி உள்ளாரே.. மதுரை ஏர்போர்ட்டில் பிரதமரும் ஓபிஎஸ்ஸும் எவ்வளவு மணி நேரம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியுமே.. அவ்வளவு ஏன், சமீபத்தில் பிரதமர் வந்திருந்தபோதுகூட, எடப்பாடி + ஓபிஎஸ் இருவரையும் அருகருகே நிற்க வைத்து, மலர்க்கொத்து வாங்கி கொண்டாரே.. இதெல்லாம் வீடியோ செய்திகளாக இன்றும் உள்ளவை..

புண்ணியமில்லை
இதை எல்லாம் மறுப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. பாஜக நிர்ப்பந்தம் தருகிறதா, இல்லையா என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக தெரிந்த விஷயம்தான்.. ஆனாலும், என்னவோ அதை மறுக்கிறார்கள்.. அதிமுக ஓட்டு வங்கி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஒன்று... எடப்பாடி பழனிசாமிக்கான ஓட்டு வங்கி என்ன? ஓபிஎஸ்ஸுக்கான ஓங்கி வங்கி என்பது என்ன? இதுவரை யாருக்குமே தெரியாது.. இருவரும் பெயர் தெரிந்த தலைவர்கள்.. அவ்வளவுதான்..

அன்வர் ராஜா
டிடிவியாவது தனித்து போட்டியிட்டு, தன்னுடைய ஓட்டு வங்கி என்ன என்பதை நிரூபித்துள்ளார்.. அப்படி இருக்கும்போது, எடப்பாடி + ஓபிஎஸ், எந்த தைரியத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.. ஓபிஎஸ், எடப்பாடி பிளவு போக, டிடிவி தினகரன், சசிகலா போன்றோருக்கான ஆதரவு வாக்குகளும் ஆங்காங்கே தெரிகின்றன.. தினகரனுக்கு தனிக்கட்சி என்றாலும், அதுவும் அதிமுகவின் ஓட்டுவங்கிதான்.. கேபி முனுசாமி, அன்வர் ராஜா என பலரும் அதிமுகவின் ஓட்டுவங்கிக்கு சேதாரத்தை உருவாக்கியே இருக்கிறார்கள்.. தேர்தல் என்று வரும்போது, அன்று சசிகலா திடீரென ஒதுங்கிவிட்டார்..

கிரேட் தினகரன்
அன்று மட்டும் அவர் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இதைவிட அதிகமான ஓட்டு தினகரனுக்கு கிடைத்திருக்கும்.. அதிமுகவுக்கும் ஒருவித அரசியல் பயத்தை அது அப்போது தந்திருக்கும்.. ஆனால், சசிகலா அப்போது ஒதுங்கிவிட்டார்.. இப்போது சசிகலா அரசியலுக்கு மறுபடியும் வந்தபிறகும்கூட, அன்று எடுத்த முடிவு அவருக்கு பாதகமாகவே இன்னமும் உள்ளது.. எந்த அரசியல்வாதியும் அரசியலை விட்டு ஒதுங்க முடியாது.. அப்படி ஒதுங்கினால் ஒரேடியாக ஒதுங்கிவிட வேண்டுமே தவிர, இடைவெளி விடக்கூடாது. எடப்பாடி பழனிசாமிக்கு, ஓபிஎஸ்ஸும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், டிடிவி தினகரன் வேண்டவே வேண்டாம், கேபி முனுசாமி வேண்டாம், அன்வர் ராஜாவும் வேண்டாம்.. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஓட்டையை உருவாக்கும் என்று நினைத்து பார்க்க வேண்டாமா?

ராஜதந்திரம்
திமுகவின் எதிர்ப்பு என்பது மட்டுமே அதிமுகவுக்கு போதுமா? அப்படியான எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் ஒருங்கிணைப்பதுதான் ராஜதந்திரம்.. ஆனால், சொந்த வாக்கு வங்கியையே பலவாறாக சிதைத்து கொண்டிருக்கும்போது, எப்படி வெற்றி பெற முடியும்.. அதனால்தான் முட்டுச்சந்து என்கிறேன். எனக்கு தெரிந்து அண்ணாமலையின் செல்வாக்கு வளர்ந்து கொண்டுதான் வருகிறது.. திருச்சி, முசிறி, லால்குடி, தொட்டியம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் எல்லாம் பாஜக வளர்ந்து வருகிறது.. இத்தனைக்கும் அதிமுக ஓட்டு வங்கி என்பது, அங்கு பாரம்பரியமாக இருந்தும்கூட, பாஜக வளர்கிறது..

வளருது தாமரை
காரணம் என்னவென்றால், அதிமுகவின் கீழ்மட்ட தலைவர்கள் யாரும், தீவிரமாக இப்போது இல்லை.. தலைமை கழகம் இருப்பதால் மட்டுமே கட்சி நமக்கு சொந்தம் என்று மேல்மட்ட தலைவர்கள் 2 பேரும் நினைக்கிறார்கள்.. அதிமுக எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், திமுகவின் எதிர்ப்பு வங்கியை, முழுக்க முழுக்க சொந்தம் கொண்டாட முடியாது.. காரணம், பாஜகவுக்கும் அதிமுக போலவேதானே அரசியல் செய்கிறது.. அண்ணாமலையும் திமுக எதிர்ப்பு ஓட்டைதானே அறுவடை செய்ய நினைக்கிறார்.. அதனால், ஒற்றுமை மட்டுமே அனைவருக்கும் பலம்" என்றார்.

ராஜதந்திரி
தொடர்ந்து அவர் பேசும்போது, "தற்போதைய பரபரப்பான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் அண்ணாமலை.. இன்னும் சொல்லப்போனால் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.. திமுகவின் ஓட்டு வங்கியை மொத்தமாக அறுவடை செய்வதே பாஜகவின் முழு எண்ணமாக உள்ளது.. நேற்றுகூட பொங்கல் கரும்பு விவகாரத்துக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. இப்படி தினம் தினம் போராட்டம் நடத்தும்போது, திமுக ஓட்டுக்கள் இங்கேயும் சிதறத்தானே செய்யும்? எனவே, திமுகவின் மொத்த அதிருப்தி ஓட்டுக்களையும், ஒருங்கிணைப்பதும், அதை தன்பக்கம் திருப்புவதும் என்பதும் அரசியலில் மிகப்பெரிய சவால்... ராஜதந்திரமும்கூட..

கப்சிப் மோடு
ஆனால், அந்த வாக்குகளை அதிமுக முழுமையாக சொந்தம் கொண்டாட முடியுமா? என்பதுதான் கேள்வி.. பாஜகவுக்கு எதிரான மனநிலை என்பது எடப்பாடி தரப்பில் இருக்கவே செய்கிறது.. எனினும் ஒருவேளை, ஓபிஎஸ் மேலும் நெருக்கமானவராக மாறி, தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை முடக்கப்பட்டுவிடுமோ? அல்லதுத 2017-ல் நடந்ததுபோல,அதிமுக 2 ஆக பிரிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் எடப்பாடி தரப்புக்கு இருக்கவே செய்கிறது.. அதனால்தான், பாஜகவுடனான கூட்டணியை தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்.. இதன்மூலம் பாஜகவுடன் நாங்கள் உறவில் இல்லை என்பது போல காட்டிக் கொண்டு, அடக்கியும் வாசிக்க நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் மீதான அச்சமும் இதற்கு காரணம்" என்றார்.
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications