எந்நேரமும் பதவி பறிபோகலாம்! திருமாவளவன் விடுத்த வார்னிங்! ஆடிப்போன விசிக மாவட்டச் செயலாளர்கள்!
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர்கள் மீது குவியும் புகார்கள் மிகுந்த மன வேதனையை அளித்திருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே விசிக மாவட்டச் செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றையும் அவர் விடுத்திருக்கிறார். அதாவது விசிகவின் மூத்த நிர்வாகிகளையும், முன்னாள் மாவட்டச் செயலாளர்களையும் தற்போது பதவிக்கு வந்த புதிய மாவட்டச் செயலாளர்கள் மதிப்பதே கிடையாது என புகார்கள் வருகின்றன.

பலரும் திருமாவளவனை நேரில் சந்தித்தே தங்கள் மனக்குமுறலை கொட்டிவருகின்றனர். இதனால் டென்ஷன் ஆன திருமாவளவன் அண்மையில் பதவி பெற்ற புதிய மாவட்டச் செயலாளர்கள் பலருக்கு டோஸ் விட்டிருக்கிறார். சிலரை தவறாக தேர்வு செய்துவிட்டோமோ என தனக்கு எண்ணத் தோன்றுவதாக நெருக்கமானவர்களிடம் வேதனையை பகிர்ந்திருக்கிறார்.
கட்சியின் முன்னணி நிர்வாகிகளை எந்தவொரு நிகழ்ச்சியிலும் மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் ஆரம்பக்காலத்தில் கட்சி வளர்த்த அவர்களை கவுரவிக்க தவறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ள திருமாவளவன், இனியும் புகார்கள் தொடர்ந்தால் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிடுவேன் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.
மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளை, செயல்பாடுகளை யார் வேண்டுமானாலும் தன்னிடம் புகாராக தெரிவிக்கலாம் என்று கூறி தொண்டர்களின் மனதை குளிர்வித்துள்ளார். அநேகமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
மற்ற கட்சிகளில் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் தலைமைக்கு வேதவாக்காக இருந்து வருகிறது. விசிகவில் நிலைமை அப்படியில்லை. இதனால் விசிக மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிர்ந்து போய்விட்டனர். எங்கே நம் மீது நிர்வாகிகள் யாரேனும் புகார்களை அனுப்பிவிடப் போகிறார்களோ என ஜெர்க் ஆகியுள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய பிறகு கட்சியில் இன்னும் சில அதிரடி மாற்றங்களை அரங்கேற்றி புதுமையை புகுத்தும் திட்டத்தில் உள்ளார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications