"அது" நடந்துடுமோ? குலுங்குதே கூட்டணி.. கமல் போட்ட "அச்சாரம்".. திமுக பற்றி கேட்டதுமே, பதிலை பாருங்க
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
பிரபல நடிகர், சினிமா தயாரிப்பாளர், டைரக்டர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி என பன்முக திறமைகொண்டவர் கமல்ஹாசன். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிறந்தநாள்: அந்தவகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை' என்று பதிவிட்டுள்ளார்.
திமுக முடிவு: ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், கமலுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்று என்றாலும், இந்த முறை, திமுக தரப்பிலிருந்து குவியும் வாழ்த்துக்கள், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளில் முதன்மையாக அடிபட்ட பெயர் மக்கள் நீதி மய்யமாகும்.. இதுவரை 2 கட்சிகளிலும் கூட்டணி உறுதியாகாவிட்டாலும், 2 கட்சிகளுமே, கூட்டணி கிடையாது என்று இதுவரை மறுக்காமல் உள்ளனர்.. ஒருமுறை உதயநிதியிடம் செய்தியாளர்கள் இதை பற்றி கேட்டதற்கு, கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி குறித்து திமுக முடிவு செய்யும் என்று சொன்னாரே தவிர, கூட்டணி கிடையாது என்று உறுதியாக சொல்லவில்லை.
சினிமா உலகில் உதயநிதியிடம் கமலுக்கு நெருக்கம் அதிகரித்துள்ள போதிலும், அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் எப்படி இருக்க போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது.. 1+1 என்ற ரீதியில் அன்று மதிமுக வைகோவுக்கு சீட் ஒதுக்கியதைபோலவே, கமலுக்கும் 1+1 சீட்டுகளை வழங்க திமுக யோசிப்பதாக சொல்கிறார்கள்.
டிட்டோ வைகோ: அன்று எப்படி வைகோவை தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் கர்ஜிக்க வைத்ததோ, அதுபோலவே, கமல் என்ற பிரபலத்தையும், தமிழகம் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவும் திமுக திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்தபடியே உள்ளன. எனினும், இதுவரை முடிவு தெரியவில்லை.
இந்நிலையில் இன்று, கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். இந்த கருவியின் பெயர் வாயு ஜல் என்பதாகும்.. காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் இதுவாகும்..
ராஜ்கமல்: சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இந்த குடிநீர் இயந்திரத்தை வழங்கியதுடன், இந்தக் கருவியை முன்மாதிரியாக அரசுக்கு பரிந்துரைப்பதாக கமல் தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக, ராஜ்கமல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் நீரை தான் பருகி வருவதாகவும், இப்போதும் ஆரோக்கியமாகவும் இருந்து வருவதாகவும் கூறிய கமல்ஹாசன், அக்குடிநீரையும் பருகினார்.
திமுக அரசுக்கு, இக்கருவியை பரிந்துரை செய்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கமலிடம் கேட்டனர். அதற்கு கமல், "அரசியல் கட்சிகளின் தொடர்பு இருக்கக்கூடாது என்பதற்காக, இதை கமல் பண்பாட்டு மையம் மூலம் செயல்படுத்துகிறோம். இங்கு வந்திருப்பவர்கள் கட்சி சார்ந்தவர்கள் அல்ல, மனிதம் சார்ந்தவர்கள்" என்று பதிலளித்தார்.
கருவிகள்: அப்படியானால், இதேபோன்று பிற மாவட்டங்களிலும், இந்த கருவியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அரசுக்கு இதுபோன்ற கருவிகளை அமைத்தால், நன்றாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறோம். அதாவது இந்த கருவியைப் பொருத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை செய்து காட்டுகிறோம் என்று பதிலளித்தார் கமல்.
"இந்த நிகழ்ச்சி திமுக கூட்டணிக்கு அச்சாரமா?" என்ற மறுபடியும் செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு கமல், "நாங்கள் எல்லாம் மனிதர்கள். எங்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அமைச்சர்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. நல்லெண்ணம் தான் எங்களை இங்கே ஒன்றிணைத்திருக்கிறது. அதனால், யாரும் அவர்களுடைய கட்சியைவிட்டுவிட்டு வரவேண்டியது இல்லை. ஆனால், மனிதநேயத்தை எப்போதும் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் விடவேண்டியது இல்லை" என்றார் கமல்.
மலர்ச்சி நெகிழ்ச்சி: "நல்லெண்ணம்தான் எங்களை இங்கே ஒன்றிணைத்திருக்கிறது" என்று கமல் சொன்னதுமே, அருகிலிருந்த திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் போன்றோரின் முகம் மலர்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்துவிட்டதாம்.. ஆனால், இவர்களின் கூட்டணி முடிவு என்ன என்பதுதான் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications