Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முட்டுச்சந்து" எடப்பாடி.. "ஆடுகள்" கொள்முதல்.. ஓபிஎஸ் டீமிலிருந்து "பங்காளிகளுக்கு" பறந்த மேட்டர்

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாருக்கு வெற்றி தோல்வி என்பதை புறந்தள்ளிவிட்டு எதிர்கால வெற்றிக்கு ஒரே வாய்ப்பு ஒற்றுமை மட்டுமே உணர்ந்து, திருந்துவது அவசியம் அவசரம்" என்று ஓபிஎஸ் டீம், எடப்பாடி தரப்பினருக்கு காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டன.. முதல் ரவுண்டிலேயே காங்கிரஸ் வேட்பாளர் முன்னணிக்கு வந்துவிட்டார்.. 3வது ரவுண்டு எண்ண ஆரம்பிக்கும்போதே அதிமுக நிர்வாகிகள் பூத்தில் ஒருவரும் காணப்படவில்லை.

அபார வெற்றி பெற்றிருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை காங்கிரஸ் வேட்பாளர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்..

சக்ஸஸ்

சக்ஸஸ்

ஆனால், இதுவே தங்களுக்கு வெற்றிதான் என்று பூரித்துக்கிடக்கிறதாம் அதிமுக கூடாரம்.. காரணம், தென்னரசுக்கு 44 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என்று அதிமுகவினரே கணிக்கவில்லையாம்.. கவுரவமான தோல்வியை தழுவியது சற்று நிம்மதியை தந்துள்ளதால், இதுவே தங்களுக்கு சக்ஸஸ்தான் என்கிறார்களாம்.. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடமே ஓபனாக கூறியிருந்தார்.. "திமுக இதுக்கு முன்னாடி வேறு எந்த தேர்தலிலும் எங்களை பார்த்து பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது" என்று ஒரே போடாக போட்டார்.

 திமுகவுக்கு செக்

திமுகவுக்கு செக்

ஆனால், அதிமுக தொண்டர்களோ தொடர்ந்து ஒருவித சோர்வில் உள்ளதாக சொல்கிறார்கள்.. காரணம், ஜெயலலிதா மறைந்து, அதிமுக இதுவரை சந்தித்த 8 தேர்தல்களிலும் கட்சி தோல்வி அடைந்திருப்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய சோர்வை தந்துள்ளதாம்.. ஏற்கனவே கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், எடப்பாடியின் பிடிவாதத்தினால், ஒருங்கிணைந்த அதிமுக என்பதே காணாமல் போனதை தொண்டர்களால் ஏற்க முடியாமல் உள்ளனர்.. இதுவே அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால், திமுகவுக்கு செக் வைப்பதுபோல, வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கலாமே என்பதே அவர்களின் பொருமலாக உள்ளது..

சர்வாதிகாரம்

சர்வாதிகாரம்


நேற்று முன்தினம் ரிசல்ட் வந்தபோதிருந்தே ஓபிஎஸ் டீம் கொந்தளித்து காணப்படுகிறது.. நேற்றைய தினம் ஓபிஎஸ் பேசும்போது, அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்... எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனர் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.. அதேபோல, ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், நேற்று முன்தினமே ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

எடப்பாடி

எடப்பாடி

அதில், "எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி. அதே 2019ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி. அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி. இந்த படுதோல்விகள் அனைத்தும் எடப்பாடி முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தோல்வி என்பதோடு ஆட்சியையும் இழந்தோம்.

GetOutEPS

GetOutEPS

2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிடவே வேட்பாளர்கள் முன்வராத பரிதாப நிலை. இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படு கேவலமான படு தோல்வி. ஆக பழனிசாமி வேலைக்கு ஆகாத வெத்து வேட்டு என்பதற்கு இவைகளே சாட்சி. இதற்கு மேலும் பொறுத்து இருந்தால் அண்ணா திமுகவின் அஸ்தி கூட அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது. எனவே ஓர் குரலாக ஒலிப்போம். #GetOutEps. அம்புட்டு தான்..." என்று பதிவிட்டிருந்தது அதிமுக கூடாரத்தையே அதிர வைத்தது.. இப்போதும் ஒரு கண்டனத்தை எடப்பாடி கூடாரம் மீது வீசியுள்ளார் மருது அழகுராஜ்.

முட்டுச்சந்து

முட்டுச்சந்து

அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "மக்கள் செல்வாக்கோ நட்சத்திர அந்தஸ்த்தோ பிறரை வசீகரிக்கும் அறிவு ஆற்றலோ குறைந்த பட்சம் அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுமாணவ தலைமைப் பண்போ கடுகளவும் இல்லாத எடப்பாடி என்கிற தனிமனிதனின் அதிகார வெறியும் அபகரிப்பு முயற்சியும் தான் முக்கடல் சூழ்ந்த பாரததத்தின் மூன்றாம் பெரும் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்படி ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதே சத்தியமான உண்மை.

பங்காளிகள்

பங்காளிகள்

ஒன்று பட்டால் தான் வென்று காட்ட முடியும் என்பதை ஆயிரம் முறை அண்ணன் ஓபிஎஸ் வலியுறுத்தியபோதும் அதனை செவி கொடுத்து கேட்காமல் இயக்கத்தின் நலத்தை விட தன்நலமே முக்கியம் என எடப்பாடி காட்டிய மூர்க்கத்தனம் தான் இப்படிப்பட்ட நிலைக்கு காரணம். இதனை தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியின் ஆட்சியை வைத்து அறுவடை செய்தவர்களும் பெருத்த மகசூல் பார்த்த முன்னாள் மாண்புமிகுக்களும். கடிவாளம் இல்லாத குறுநில மன்னர்களாக திரியும் மாவட்டச் செயலாளர்களுமே இந்த பரிதாப சூழலுக்கு பங்காளிகள் என்பதை உணர வேண்டும்.

 அம்புட்டுதான்

அம்புட்டுதான்

அடித்து வைத்துள்ள பணத்தை கொண்டு பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர பொதுமக்களை வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டு தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் இன்றைய படு தோல்வி நாளைய தொடர் தோல்விகளாகிவிடும் என்பது நிச்சயம். எனவே யாருக்கு வெற்றி தோல்வி என்பதை புறந்தள்ளி விட்டு எதிர்கால வெற்றிக்கு ஒரே வாய்ப்பு ஒற்றுமை மட்டுமே உணர்ந்து திருந்துவது அவசியம் அவசரம். அம்புட்டு தான்" என மருது அழகுராஜ் சற்று காட்டமாகவே கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+