Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ப "அவரை" கழட்டி விடுதா பாஜக? அமித்ஷாவை நெருங்கிட்டாரே எடப்பாடி.. ஒரே சந்திப்பில் இவ்ளோ மேட்டரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி பாஜகவை எடப்பாடி பழனிசாமி அதிகம் நெருங்கி வருகிறதா? அல்லது ஓபிஎஸ் தரப்பு அதே நெருக்கத்துடன் உள்ளதா? என்பது தெரியவில்லை.. காரணம், அமித்ஷாவுடனான தம்பிதுரையின் சந்திப்பு பல்வேறு தகவல்களை கிளப்பி விட்டுள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, திமுக எம்பிக்கள் என்றாலே ஓரிருவரே கண்முன் வந்து நிற்பார்கள். அதிலும், டெல்லியில் எந்தவித விவகாரங்களை கவனித்து கொள்வதானாலும், கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலு, மற்றும் கனிமொழியாகவே இருந்தனர்.. இப்போதும் அதுபோலவே செயல்படுகிறார்கள்.

 Can PM Modi avoid meeting O paneerselvam and What are the Edapadi palanisamys strategies to deal with BJP

அந்த அளவுக்கு தலைமை மீது இவர்களுக்கும், இவர்கள் மீது தலைமைக்கும் அடர்ந்த நம்பிக்கை நீடித்து வருகிறது. ஆனால், அதிமுகவில் அப்படி இல்லை.. அதிலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுகூட, நிலையான ஒருவரை டெல்லிக்கான சோர்ஸாக வைத்து கொள்ளவில்லை.. திடீரென தம்பிதுரை சீனில் வருவார், பிறகு காணாமல் போய்விடுவார்.. அந்தவகையில், சமீபகாலமாகவே தம்பிதுரைக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் அதிகமாகி வருகிறது.

சீக்ரெட் மீட்டிங்: குறிப்பாக, ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியபிறகு, தம்பிதுரையை அதிகம் நம்பக்கூடிய நபராக கருதுகிறார் எடப்பாடி.. காரணம், நேரடியாகவே மேலிட பாஜகவின் ஆதரவை ஓபிஎஸ் பெற்றுள்ளபோது, தனக்காக லாபி செய்ய நம்பகமாக யாரும் இல்லை என்று கருதிய நிலையில்தான் எடப்பாடியின் கவனம் தம்பிதுரை மீது விழுந்துள்ளதாக சொல்கிறார்கள். 3 மாதங்களுக்கு முன்பு, ஜி20 மாநாட்டில் பங்கேற்க பொதுச்செயலாளர் என்று பதிவிட்டு, எடப்பாடிக்கு அழைப்பிதழ் வெளியானது.. இதற்கு பின்னணியில் தம்பிதுரை இருப்பதாக அப்போதே சலசலக்கப்பட்டது.. அந்த சலசலப்புதான் சமீபகாலமாகவே உறுதியாகி வருவதாக சொல்கிறார்கள்.

அப்பாயிண்மென்ட்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம்பிதுரை சந்தித்து பேசியிருக்கிறார்.. இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டு வருகின்றன.. "அமித்ஷா சொன்னது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, கூட்டணி குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும்" என்று மாநில தலைவர் அண்ணாமலை சொல்லிய நிலையில், இந்த சந்திப்பு நடந்து முடிந்துள்ளதை கவனிக்க வேண்டி உள்ளது.. பிரதமர் நாளை சென்னை வரஉள்ளார்.. அவரை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக அப்பாயிண்மெண்ட் கேட்டுள்ளனர்.. பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக அப்பாயிண்மென்ட் கேட்டு பிரதமரை சந்திக்க எடப்பாடி முயல்வதாக தெரிகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

சரியும் செல்வாக்கு: மேலிட பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் திடமாக உள்ளதால், எடப்பாடியை பிரதமர் சந்திக்க நேர்ந்தால், ஓபிஎஸஸையும் கட்டாயம் சந்திக்கக்கூடும்.. அதனால்தான், "பிரதமரை சந்திக்க சந்திக்க பன்னீர்செல்வத்தை அனுமதிக்க கூடாது" என்று மேலிடத்தை அதிமுக தரப்பில் வலியுறுத்தியதாகவும் சொல்கிறார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில், பிரதமருடனான சந்திப்பை நடத்தியே தீர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு காய்நகர்த்தி வருவது வேறு விஷயம்.. ஆனால், அமித்ஷாவை தம்பிதுரை சந்திக்க என்னதான் காரணமாக இருக்க முடியும்?

விஷயம் இதுதானாம்: எப்போதுமே தன்னுடைய நிலைப்பாட்டை மேலிட பாஜக தலைவர்களுக்கு தெரிவிப்பதற்காக தம்பிதுரையை தூதராக அனுப்பி வைப்பது எடப்பாடியின் வழக்கம். தம்பிதுரையும் தன் மீதான நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்.. எம்பி தேர்தலில் தம்பிதுரையை முன்னிலைப்படுத்த நினைக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இப்போதைக்கு தனக்காக லாபி செய்யக்கூடியவர் தம்பிதுரை என்பதால், இப்படி ஒரு முன்னெடுப்பை துவங்கி உள்ளதாக தெரிகிறது.. இதனிடையே, அடுத்த மாதம், 10ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்க போகிறது.. கர்நாடகத்தில் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு வங்கி உள்ளது.. அந்தவகையில், பாஜக கூட்டணியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விரும்புகிறதாம்..

 Can PM Modi avoid meeting O paneerselvam and What are the Edapadi palanisamys strategies to deal with BJP

இலை - தலை: அந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம்.. அதனால்தான், இதை பற்றி உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் பேச, தம்பிதுரையை அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. கர்நாடக தேர்தல் பணிக்கான நிதி பற்றியும், எம்பி தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் தருவது பற்றியும் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுல்லாமல், அதிமுக கேஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. இப்போதைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் இருந்தாலும், தேர்தல் ஆணையம் இதுவரை பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்கவில்லை. ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

ஆனால், ஓபிஎஸ் கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவார் என்றால், மறுபடியும் எடப்பாடிக்கு "இலை" சிக்கல் வந்துவிடும்.. இது சம்பந்தமாகவும், அமித்ஷா - தம்பிதுரை சந்திப்பு நடந்ததாகவும் சொல்கிறார்கள்.. இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. பார்லிமென்ட் கூட்டம் முடிவடைந்ததுமே, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தால், தனக்கு பதவி தருமாறும் தம்பிதுரை கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.. ஒரே ஒரு சந்திப்பை வைத்து, ஏகப்பட்ட வியூகங்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன என்றாலும், நாளை சென்னை ஏர்போர்ட்டில் யாருடன் சந்திப்பு நடக்க போகிறது என்பதில்தான் மொத்த சஸ்பென்ஸும் அடங்கி உள்ளது. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+