மீண்டும் "முருகன்".. இதெல்லாம் லிஸ்ட்ல இல்லயே.. தைலாபுரத்தில் அதே "முடிச்சு".. எகிறியடிக்கும் திமுக
சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும்நிலையில், திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.. இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயலுமா? என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு வருட காலமாகவே எழுந்து வருகிறது..

இதுசம்பந்தமாக அதிமுக-பாமக தரப்பில் சீக்ரெட்டான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், 9 + 1 என்ற ரீதியில் பாமக சீட் பேரம் நடத்தியதாகவும், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் கசிந்தன.
என்ன காரணம்: காரணம், சமீப தேர்தல்களில் பாமகவுடன் கூட்டணி வைத்தும், அக்கட்சி போதுமான வெற்றியை பெற்றித்தரவில்லை.. அத்துடன், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை வரவிடாமல் பாமக தடுத்து விடும் என்று மூத்த அதிமுக தலைவர்கள் கருதுகிறார்களாம்.. அதனால், அதிமுகவுடனும் பாமக கூட்டணி வைப்பது சந்தேகம்தான் என்றார்கள்.
அப்படியானால், 3வது அணியை பாஜக கட்டமைக்க நேர்ந்தால், பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக முயலுமா? என்ற அடுத்த சந்தேகம் கிளம்பியது. ஒதுக்கப்படும் 13 தொகுதிகளில், சிதம்பரம், கடலூர், தர்மபுரியில் கண்டிப்பாக பாமக வெற்றிபெற்றால்தான் மத்திய அமைச்சர் போஸ்டிங் தரப்படும் என்ற கண்டிஷனை பாஜக போட்டதாம். அதனால்தான், பாஜகவுடன் கூட்டணி வைக்க, பாமக தயங்கியதாக தகவல்கள் வட்டமடித்தன.
திமுக கூட்டணி: அப்படியானால், பலம்வாய்ந்த திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயலலாம் என்கிறார்கள்.. எனினும், முதல்வர் ஸ்டாலின் இதற்கு, பிடிகொடுக்கவில்லையாம். பிறகு பார்க்கலாம் என்ற ரீதியில் பாமக தலைமைக்கு பதிலளித்து விட்டாராம். அப்படியே கூட்டணியில் இணைவதானாலும், 3 சீட்டுக்கு மேல் ஒதுக்கும் எண்ணம் திமுக மேலிடத்துக்கு இல்லை என்றும், அதனால்தான், கூட்டணி கதவை, திமுக ஆரம்பத்திலேயே மூடிவிட்டதாம்.
திமுக முடிவு: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.. "வரும் 2026ல் மறுபடியும் முதல்வராக ஸ்டாலினை ஏற்போம்" என்று அன்புமணி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கண்டிஷனை திமுக விதித்ததாக சொன்னார்கள்.. இதெல்லாம் 3 மாத காலத்துக்கு முன்பு கசிந்த செய்திகள் என்றாலும், கூட்டணி இன்னும் யாருடனும் முடிவாகவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டு சட்டமசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த சந்திப்பில் முன்வைத்தார் ராமதாஸ்.
ராமதாஸ்: இந்த சந்திப்பின் போது, 'நானும் இருக்க வேண்டும்' என அன்புமணி விரும்பியதாகவும், ஏனோ அவரை தவிர்த்துவிட்டு ஜி.கே.மணியை ராமதாஸ் அழைத்து சென்றதாகவும் பாமக தரப்பிலேயே ஒரு தகவல் பரவியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளைத் தாண்டி, திமுகவுடன் கூட்டணி குறித்து ராமதாஸ் விவாதித்துள்ளார் என்று தகவல் பரவியுள்ளது.
திமுக மேலிடம்: இது ஒருபக்கமிருந்தாலும், இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்து பேசப்பட்டதா? என்று பாமக மற்றும் திமுக மேலிட தொடர்பாளர்களிடம் நாம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
" டாக்டர் ராமதாசுடன் துரைமுருகனும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தொடர்பில் இருந்து வருகிறார்கள். திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என இவர்கள் விரும்புகின்றனர். இதனை ஸ்டாலினிடம் துரைமுருகன் ஏற்கனவே விவரித்திருக்கிறார். ஆனால், பாமகவை சேர்ப்பதினால் தற்போதைய திமுக கூட்டணியில் குழப்பங்கள் வரும். அது தேவைதானா? என யோசித்தார் ஸ்டாலின். அதனாலேயே பாமக பேச்சை எடுப்பதை குறைத்துக் கொண்டார் துரைமுருகன்.
துரைமுருகன்: இந்த நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்த துரைமுருகனின் உடல் நலத்தை விசாரித்தார் ராமதாஸ். அப்போது கூட்டணி குறித்து மீண்டும் இருவரும் விவாதித்திருக்கிறார்கள். இதனையடுத்து ஸ்டாலினிடம் பேசினார் துரைமுருகன். இந்த முறை பாமகவை மறுக்கவில்லை ஸ்டாலின். இதற்கு பல காரணங்களும் காரணிகளும் இருக்கின்றன.
இதனையடுத்து, முதலில் முதல்வரை சந்தியுங்கள்.. மற்றதை பேசிக்கொள்ளலாம் என துரைமுருகனும் எம்.ஆர்.கே.வும் சொல்ல, பாமகவின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் ஸ்டாலினை சந்திக்க சம்மதித்தார் ராமதாஸ். கூட்டணி, சீட்டுகள் எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளில் சில உத்தரவாதங்களை "ஆஃப் த ரெக்கார்டாக " பெற்றுள்ளார் ராமதாஸ். இதனை அடுத்தே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
கோரிக்கை: மற்றபடி இந்த சந்திப்பில் கோரிக்கை மட்டுமே பேசப்பட்டது. அரசியல் பேசப்படவில்லை. அதிகாரிகளையும் அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு எப்போதும் விவாதிக்க மாட்டார் ராமதாஸ். அதனால், இந்த சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை " என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications