"ரிஸ்க்" எடுக்குதா பாமக.. தர்மபுரியை "தாண்டும்" அன்புமணி?.. ஆட்டமே இனிதான் ஆரம்பமாம்.. அதிரடி முடிவு

பாமகவின் கூட்டணி முடிவு என்ன என்பது குறித்து கணேஷ்குமார் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-ல் பாமக தலைமையிலான ஆட்சி அமைவது நிச்சயம் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் சீனியர் தலைவர் கணேஷ்குமார்.. மேலும், வரப்போகும் தேர்தல்களில் பாமக முன்னெடுக்கும் முக்கிய மாற்றம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்ன?

எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில் தமிழக கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.. சில கட்சிகளில், கூட்டணி பேச்சுக்கள், சீட் பேரங்கள் திரைமறைவில் நடந்து வருவதாகவே தெரிகிறது.

ஆனால் பாமக மட்டும் கப்சிப்பென்று அமைதியாகவே இருக்கிறது.. பாமகவுடன் கூட்டணி என்று அதிமுகவில் எடப்பாடியும் சொல்லவில்லை.. எங்கள் கூட்டணியில் பாமக கிடையாது என்று திமுகவும் சொல்லவில்லை.. திமுகவா? அதிமுகவா? என்று அன்புமணியும் சொல்லவில்லை.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

மாறாக, "2026ல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகம் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.. இந்நிலையில், பாமகவின் முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அவரிடம், பாமகவின் தேர்தல் வியூகம் என்ன? எந்த தேர்தல் வந்தாலும் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மற்றும் வடமாவட்டங்களிலேயே போட்டியிடுகிறாரே? பிற கட்சி தலைவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் போட்டியிடும்போது, அன்புமணி மட்டும் தென்மாவட்டங்களுக்குள் நின்று போட்டியிடுவதில்லையே? என்ன காரணம் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

அதற்கு கணேஷ்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை தேர்தல் நேரத்தில்தான் எங்கள் கூட்டணி நிலைப்பாடு முடிவாகும்.. 2026-ல் பாமக ஆட்சியமைக்கும் என்பதே எங்கள் லட்சியம்.. எங்களை பொறுத்தவரை, எங்களின் வளர்ச்சியை மட்டுமே இப்போதைக்கு முன்னெடுத்து செல்கிறோம்.. எங்கள் கட்சியின் பலவீனம் எதுவென்றால், போதிய மீடியாக்கள் எங்களுக்கு இல்லை, எங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான வசதிகளும் அப்போது முதல் இப்போது வரை இல்லை.. இல்லை.. திட்டமிட்டே சாதீய முத்திரை எங்கள் கட்சி மீது குத்தப்பட்டு விட்டது..

போராளி ஐயா

போராளி ஐயா

ஆனால், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிதான் பாமக.. காரணம், அனைத்துக்கும் உரிமையுடன் குரல் கொடுத்து, போராளி என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டு, களத்தில் முதல் ஆளாக, இறங்குபவர் ஐயா ராமதாஸ் மட்டுமே.. எனினும், எங்கள் கருத்துக்களை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே எங்களின் பலவீனம்.. அன்று ஜெயலலிதா, கருணாநிதி என்ற 2 ஆளுமைகள் இருந்தபோதே நாங்கள் 2016-ல் தனித்துதான் போட்டியிட்டோம்.. அதற்குபிறகும்கூட, அதிமுகவை எங்களைவிட அதிகமாக விமர்சனம் செய்த கட்சி வேறு கிடையாது..

 பலவீனம்

பலவீனம்

அதையும் மீறி நாங்கள் ஏன் கூட்டணி வைத்தோம் என்றால், எங்களின் 10 அம்ச கோரிக்கை உட்பட பல்வேறு விஷயங்களை மக்களின் நலனுக்காக செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு அங்கே போனோம். அந்த கோரிக்கைகளை நாங்கள் செய்தும் காட்டி உள்ளோம்.. ஆன்லைன் சூதாட்டத்துக்கு இப்போது போராடுகிறோமே, இதை அன்றே கிளப்பியது பாமகதான்.. 7 தமிழர் விடுதலையாகட்டும், 10.5. சதவீத இடஒதுக்கீடு, என எத்தனையே விஷயங்களுக்கு முதன்முதலில் குரல் கொடுத்தது பாமகவாகத்தான் இருக்கும்.

மிஸ்ஸாயிடுச்சு

மிஸ்ஸாயிடுச்சு

தர்மபுரியை தாண்டி அன்புமணி ராமதாஸ் ஏன் போட்டியிடுவதில்லை? என்று கேட்கிறீர்கள்.. அன்று பென்னாகரம் தொகுதியில் நாங்கள் போட்டியிடுவதாக எண்ணமே இல்லை.. அரக்கோணம் மாவட்டம் சோழிங்கநல்லூரில்தான் போட்டியிடுவதாக இருந்தது.. ஆனால், நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால், பென்னாகரம் தொகுதிக்கு வேறு வழியில்லாமல் தள்ளப்பட்டோம்.. முதல்முறையாக அன்புமணி, ராஜ்யசபா எம்பியானபோது, பின்வாசல் வழியாக வந்துவிட்டார், அன்புமணிக்கு மக்களை நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லை, மக்களை சந்தித்தால் தோற்றுவிடுவார் என்றெல்லாம் பேசினார்கள்..

டாக்டர் ஐயா

டாக்டர் ஐயா

ஆனால், அடுத்த தேர்தலிலேயே மக்களை சந்தித்து, தனியாக நின்றே எம்பியானார்.. அதற்கு பிறகு அத்தகைய விமர்சனம் அன்புமணி மீது யாருமே வைக்கவில்லை.. அதுபோலவே, தென்மாவட்டங்களிலும் அன்புமணி நிச்சயம் போட்டியிடுவார்.. அதையெல்லாம் இனிவரும் காலங்களில் பார்க்கத்தான் போறீங்க... பொதுக்குழு முடிவுபடிதான் போட்டியிடும் தொகுதிகளும் முடிவாகும்.. எங்கள் கட்சியை பொறுத்தவரை, டாக்டர் ஐயாவும்சரி, இப்போதைய தலைவர் டாக்டர் அன்புமணியும் சரி, பொதுக்குழுவுக்கு முக்கியத்துவம் தருபவர்கள்..

முத்திரை சாதி

முத்திரை சாதி

கடந்த 2019 தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்பதற்காக, ஓட்டெடுப்பே நாங்கள் நடத்தியிருக்கிறோம்.. வேறு எந்த கட்சியும் செய்யாத காரியத்தை பாமக செய்தது.. அந்த அளவுக்கு எங்கள் பொதுக்குழு முடிவுக்கு முக்கியத்துவம் தருவோம்.. தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் அதிகம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? பாமக வலுவாக இருக்கும் தொகுதி என்பதே உண்மை... பாமக அனைத்து சமுதாயத்துக்குமான கட்சி.. அந்த வகையில் வன்னியர்களுக்குமான கட்சி, அவ்வளவுதான்..

ராஜபாளையம்

ராஜபாளையம்

அதுமட்டுமல்ல, வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பதாலேயே வடமாவட்டங்களை தேர்ந்தெடுக்கிறோம்.. அப்படி பார்த்தால், கடந்த உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரியில் ஜெயிச்சிருக்கோமே.. 2011-ல் ராஜபாளையத்தில் ஒரு தொகுதியிலும், மதுரை மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டத்திலும்கூட போட்டியிட்டுள்ளோமே.. அவ்வளவுஏன், கடந்த எம்பி தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் நின்றோமே.. விரைவில் தென்மாவட்டங்களிலும் பாமக அழுத்தமாக கால் பதிக்கும் என்றார் கணேஷ்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+