"பச்சை கொடி".. விசிக திருமாவளவன் "அவருடன்" இணைகிறாரா.. குஷியில் தைலாபுரம்.. நிமிர்கிறதா வடமாவட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் விசிக இணைய போகிறதா? அல்லது பாமக இணைய போகிறதா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறிவரும்போது, முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகிறது.

இந்த முறை எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில், மெகா கூட்டணி அமைத்து போட்டியிடவும் முயன்று கொண்டிருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பலம்வாய்ந்த கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

Can PMK form an alliance with VCK and What is Thirumavalavan going to do in the MP Election

திமுக கூட்டணி: அப்படியானால், இப்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளும் திமுகவுடன் இணையலாம் என்று கருதப்பட்டது.. அதற்கேற்றவாறு, திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க முயல்வதாக ஒருபேச்சும் அடிபட துவங்கியது.. ஆனால், பாமகவுடனான கூட்டணி பற்றி திமுக இதுவரை எதையுமே வெளிப்படையாக சொன்னதில்லை.. பாமக சார்பிலும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிப்படையாக வந்தது கிடையாது. எனினும் திருமாவளவன் மட்டும், திமுகவுடனான விசிகவின் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அவ்வப்போது உறுதிபடுத்தி கொண்டே வந்தார்.

அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் சரி, பாமக மற்றும் பாஜக கூட்டணியுடன் சேர மாட்டேன் என்றும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் அழுத்தமாக கூறியிருந்ததை அனைத்து கட்சிகளுமே கவனிக்கவே செய்தன.. அப்படியானால் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற நேர்ந்தால், விசிக வெளியேறிவிடுமா? என்ற சந்தேகமும் கிளம்பின..

ரகசிய பேச்சு?: இப்படிப்பட்ட சூழலில்தான், பாமக தலைவர் அன்புமணியும், விசிக தலைவர் திருமாவளவனும் இணைந்து செயல்படும் வகையில், ரகசிய பேச்சு நடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதற்காக சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.. திமுக கூட்டணியிலேயே பலம்வாய்ந்த கட்சியாக விசிக உள்ளது.. 2 தொகுதிகளை திமுக மேலிடம் ஒதுக்கக்கூடும் என்றாலும், 3 தொகுதிகளுக்கு குறையாமல் விசிக கேட்கும் என்றும் தெரிகிறது.
விசிக கறார்: விசிகவை பொறுத்தவரை, ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டிய சமயங்களில் எதிர்த்தும், ஆதரிக்க வேண்டிய இடங்களில் ஆதரித்தும், ஒரு கூட்டணி கட்சியை போலவே செயல்படுகிறது என்கிறார்கள்.. அவ்வளவு ஏன், சில நாட்களுக்கு முன்பு, திமுககாரர் போலவே பேசறீங்களே? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, கொந்தளித்திருந்தார் திருமாவளவன்.. திமுக அரசை அதிகமாக எதிர்த்து போராட்டங்களை செய்தது விசிகதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்..

Can PMK form an alliance with VCK and What is Thirumavalavan going to do in the MP Election

இவை அனைத்தையுமே பிற கட்சி தொண்டர்களும் கவனித்தே வருகிறார்களளாம்.. எப்படியும் இந்த முறை 3 சீட்களை கேட்க நினைத்தாலும், திமுக அதை வழங்குமா என்பது தெரியவில்லை.. இதையடுத்தே, ரகசிய பேச்சுவார்த்தை அன்புமணி, திருமாவளவன் தரப்பினரிடையே நடந்ததாக சொல்கிறார்கள்.. ஆனால், பாமகவை பொறுத்தவரை, இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை.. அன்புமணியிடம் இதை பற்றி பலமுறை செய்தியாளர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர்..

பாமக தலைவர்: அதற்கு அன்புமணி,"நீங்க எப்படி கேட்டாலும் சரி, எங்க பதில் இதுதான்.. நாங்கள் இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இப்போது திடீரென திருமாவளவன் - அன்புமணி தரப்பு பேச்சுவார்த்தை என செய்திகள் கசிய காரணம், வட மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில், பாமக - விசிக இணைந்து போட்டியிட்டால், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று தலைவர்கள் கருதுகிறார்களாம்..
அதுமட்டுமல்ல, வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இதில் இணைந்து கூட்டணி அமைத்து, கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று வன்னியர் சமுதாயத்தினரும் விரும்புகின்றனராம்.. அதாவது, அன்புமணி - திருமாவளவன் - வேல்முருகன் இவர்கள் புதுக்கூட்டணி அமைத்தால், வட மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதே அந்த கணக்கின் சாராம்சமாக உள்ளது.

இந்த நேரத்தில் நாம் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. 2 மாதங்களுக்கு முன்பு, விசிக மாநில துணை பொதுச்செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான ஆளூர் ஷா நவாஸ், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி தந்திருந்தார்.. அப்போத அவரிடம், திமுக கூட்டணியில் பாமக இடம்பெற நேருவதாக ஒரு பேச்சு உள்ளதே.. அப்படி கூட்டணியில் பாமக இடம்பெற்றால், விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வியை நாம் முன்வைத்தோம். அதற்கு ஆளூர் ஷாநவாஸ் சொன்ன பதில்தான் இது:

Can PMK form an alliance with VCK and What is Thirumavalavan going to do in the MP Election

அவதூறுகள்: "திமுகவை நோக்கி மட்டுமல்ல, பாமகவினர் விசிகவையும் நோக்கியும்தான் நகர்கிறார்கள்.. இப்போதெல்லாம் விசிகவை எங்கேயாவது பாமகவினர் விமர்சிக்கிறார்களா? கிடையாது.. 10 வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு அவதூறுகளை விசிக மீது பாமகவினர் பேசினார்கள்.. குற்றவாளி போல எங்களை சித்தரித்தார்களே? இன்னைக்கு அதெல்லாம் எங்கே போச்சு? எங்களது பேச்சையே பாமக எடுப்பதில்லையே..

ஆக, திமுகவையும் பாமக விமர்சிப்பது இல்லை, விசிகவையும் விமர்சிப்பதில்லை.. ஆனால், எந்தவித ஒரு மாற்றும் கருத்தும் இல்லாமல் கொள்கைப்பூர்வமாக திமுகவுடன் உடன்பட்டு நிற்கிறது விசிக... அது மொழிக்கொள்கையாக இருந்தாலும்சரி, இடஒதுக்கீடு கொள்கையாக இருந்தாலும் சரி, கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கொள்கையாக இருந்தாலும், எல்லாவற்றிலும் உடன்பட்டு திமுகவுடன் ஒன்றாக நிற்கிறோம்" என்று கூறியிருந்தார்.

ஆளுர் ஷாநவாஸ் சொல்வதைப்போல, பாமக - திமுக இடையே 10 வருடமாக மோதல் போக்கு இல்லாதது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், கூட்டணியையும் தாண்டி, பாமக - விசிக கட்சிகள் ஒன்றிணைந்தால் நல்லாதான் இருக்கும்.. என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+