தமிழ்நாட்டில் "இறங்கியடிக்குது" பாஜக.. தாறுமாறா போகுதே கணக்கு? இப்ப திமுகவுக்கு பெரிய வேலை வந்தாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற ஆர்வம் இப்போதே எழ துவங்கிவிட்டது.. இதில் திமுகவின் வியூகங்கள் இனி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. என்ன காரணம்?

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுக விவசாய தொழிலாளர் அணிச்செயலாளர் அன்னியூர் சிவா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

PMK Vikravandi by election Vikravandi constituency DMK government

அதேபோல, எப்போதுமே இடைத்தேர்தல்களில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாமகவும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது.. விக்கிரவாண்டி தொகுதி பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்பதால், விட்டதை பிடிக்க தயாராகி வருகிறது.

சிவி சண்முகம்: ஆனால், அதிமுக விக்கிரவாண்டியில் போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டதுதான் மிகப்பெரிய திருப்பத்தை களத்தில் ஏற்படுத்தி வருகின்றன.. இத்தனைக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது.. அப்படியிருந்தும், தேர்தல் குறித்த ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கியிருப்பது புரியாத புதிராகவே உள்ளதாக சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்..

அதேபோல, பாஜகவிடமிருக்கும் மறைமுக உறவு காரணமாகவே அதிமுக போட்டியிடாமல் விலகுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சொல்லியிருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது. பாமகவை போலவே ஓரளவு செல்வாக்கு அதிகமுள்ள தேமுதிகவும் இங்கு போட்டியிடாமல் ஒதுங்குவது, பாஜக கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்காகத்தானோ? என்ற சந்தேகத்தை களத்தில் அதிகமாக்கி வருகிறதாம்.

தகர்ந்த கணிப்பு: அதிமுக, திமுக, பாமக, தேமுதிக என 4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் திமுக வெற்றி பெற்றுவிடும் என்று கணிக்கப்பட்டு வரும்நிலையில், வெறும் பாமக, நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே களமிறங்கியிருப்பது திமுகவுக்கு டென்ஷனை அதிகரிக்க செய்துள்ளது..

அப்படியானால் தேமுதிக, அதிமுக ஓட்டுக்களும் பாமகவுக்கே செல்லக்கூடும் என்றும் சொல்கிறார்கள். அப்படி சென்றால், திமுகவின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை தரலாம் என்கிறார்கள்.

அமைச்சர்கள்: அதனால்தான், ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக முதல்வர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.. ஒவ்வொரு அமைச்சருக்கும், ஓட்டுக்களை பெறவேண்டி டார்க்கெட்டும், வியூகமும் அமைத்து தரப்பட்டுள்ளது..

அந்தவகையில் திமுக Vs பாமக என்றே போட்டி நிலவுகிறது என்றாலும், அபார வெற்றியை பெறுவதற்கான கடுமையான முயற்சியை திமுக கையில் எடுத்துள்ளதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

கொதிக்கும் களம்: இதுபுறமென்றால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அவர்களது இயலாமையை காட்டுவதாக திமுக கூட்டணி தொடர்ந்து விமர்சிக்க துவங்கியிருக்கிறது.. எந்த சூழலிலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தே அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

10 வருடங்கள் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியால் தேர்தலை சந்திக்க முடியாதா? எந்த விதத்தில் இதை நியாயப்படுத்த முடியும் என்றும் திமுக தரப்பு கேள்வி எழுப்பியிருப்பது, அரசியல் களத்தை மேலும் சூடாக்கிவிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+