ரேபீஸ் பசு பாலை குடித்ததால்.. ஒட்டுமொத்த கிராமமும் பீதி! பால் மூலம் மனிதர்களுக்கு ரேபீஸ் பரவுமா?
சென்னை: இப்போது நாட்டில் நாய்க்கடி அச்சம் அதிகமாகவே இருக்கிறது. எங்கு வெறிநாய் கடித்தால் ரேபீஸ் வருமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பசு பாலை எடுத்துக் கொண்டதால் ஒட்டுமொத்த கிராமமே பீதியில் இருக்கிறது. அப்படி ரேபீஸ் பசுவின் பாலை குடித்தால் மனிதர்களுக்கு ரேபிஸ் வருமா.. நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு கிராமம் இப்போது அச்சத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் பஞ்சாமிர்தம் தான். எது பஞ்சாமிர்தத்தால் ஏன் கிராமமே பயக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதில் விஷயம் என்னவென்றால் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட பசுவின் பாலை வைத்து அந்த பஞ்சாமிர்தம் தயாரித்துள்ளனர். இந்த பஞ்சாமிர்தத்தை சுமார் 200 பேர் சாப்பிட்டுள்ளனர். இதுவே அச்சத்திற்குக் காரணம்.

பசுவுக்கு ரேபீஸ்
ரேபீஸ் நோயால் உயிரிழந்த அந்தப் பசு, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு வெறிநாயால் கடிக்கப்பட்டுள்ளது.. அப்போது அதன் உடலில் ரேபீஸ் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இந்தச் சூழலில் தான் திடீரென அந்த பசு ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கிராமமும் அச்சத்தில் இருக்கிறது. அந்த கிராம மக்களை ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அம்மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இதுவரை சுமார் 170 பேர் முதல் டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கூட கிரேட்டர் நொய்டாவில் ரேபீஸால் பாதிக்கப்பட்ட பசுவின் பாலைக் குடித்ததால் பெண் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அந்த பெண் குடித்த பால் பாஸ்டரைஸ் செய்யப்பட்டதா அல்லது பச்சைப் பாலா என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், அந்தப் பெண்ணுக்குப் பால் மூலமாகவே ரேபீஸ் வைரஸ் பரவியது என்பதையும் உறுதி செய்ய முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், பால் மூலம் ரேபீஸ் பரவுமா என்ற கேள்வி எழுகிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மையம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. கடந்த காலங்களிலும் கூட அமெரிக்காவில் இதுபோல வெறிநாய் கடித்த பசுக்களின் பாலை குடித்த சம்பவம் நடந்துள்ளது. 1996 மற்றும் 1998 என இரு முறை நடந்துள்ளது. 1996ல் சுமார் 66 பேர் பாஸ்டரைஸ் செய்யப்படாத பாலை (பச்சை பால்) அருந்தினர். 1998-ல் 14 பேர் இதுபோல பாலை குறித்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதாக ஆவணப்படுத்தப்படவில்லை.
பாலை பச்சையாகக் குடிக்கும்போது, அதாவது பாஸ்டரைஸ் செய்யப்படாத பாலில், ரேபீஸ் நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் அதை முழுமையாக நிராகரிக்க முடியாது. அதேநேரம் பசுக்களின் பாலில் ரேபீஸ் வைரஸ் இருந்தாலும், அதை பாஸ்டரைஸ் செய்தால், ரேபீஸ் ஆபத்து நீங்கும் என்கிறார்கள்.
பாஸ்டரைசேஷன் முக்கியம்
பாலை குறுகிய நேரம் அதீத வெப்பத்திற்குச் சூடாக்கி, அதன் பிறகு அதை குளிர்விக்கும் முறை தான் பாஸ்டரைசேஷன் என்பார்கள். இதை முறையாகச் செய்தால் பாலில் இருக்கும் எல்லா பாக்டீரியா மற்றும் வைரஸ் அழியுமாம். நமது நாட்டில் விற்கப்படும் கிட்டத்தட்ட எல்லா பாக்கெட் பாலும் பாஸ்டரைசேஷன் செய்யப்பட்டே விற்கப்படுவதால் நமக்கு ஆபத்து இல்லை.
டாக்டர் அனுஜ் திவாரியும் கூட பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதே கருத்தை வலியுறுத்தினார். ரேபிஸால் பாதிக்கப்பட்ட பசுவின் பாலை குடித்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர், "பாஸ்டரைஸ் செய்யப்பட்ட பால் என்றால் இதற்கு வாய்ப்பு இல்லை" என்றே தெரிவித்தார்.
தடுப்பூசி
1999ல் அமெரிக்காவில் நடந்த சம்பவங்களிலும் கூட ரேபீஸ் பசுவின் பாலை குடித்த மனிதர்களுக்கு ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டது எதுவும் கண்டறியப்படவில்லை. பிறகு ஏன் உத்தரப் பிரதேசத்தில் தடுப்பூசி போட சொல்கிறார்கள் என்ற கேள்வி வரும். ரேபீஸ் நோயின் மரண விகிதம் கிட்டத்தட்ட 100% என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தடுப்பூசி போட சொல்கிறார்கள். அமெரிக்காவிலும் அப்போது ரேபீஸ் பசு பால் குடித்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மக்கள் அச்சமின்றி இருக்கலாம்.
பச்சை பாலில் ரேபீஸ் மட்டுமின்றி பல வகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் இருக்கும். பாஸ்டரைசேஷன் செயல்முறையில் தான் அது அழியும். எனவே, பாஸ்டரைசேஷன் பால் தான் பாதுகாப்பானது. அதைக் கொதிக்க வைக்கத் தேவையில்லை என்றாலும் கூட நீங்களும் கூட வீட்டில் ஒரு முறை அந்த பாலை கொதிக்கவிட்டு பிறகு பயன்படுத்தலாம்!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications