Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி அமைச்சராக முடியுமா.. உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான பாயிண்ட்.. நேற்று என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்க கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க விரும்பினால், தனி மனுவாகத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதன் மூலம், அவர் மீண்டும் அமைச்சராவது நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது மனுதாரர் அமைச்சராக தொடரவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாக கூறி கடந்த ஏப்ரல் 28-ந்தேதி நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.

Can Senthil Balaji become a minister What happened in the Supreme Court yesterday

உச்ச நீதிமன்றம் கேள்வி

அதேநேரம் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடித்தால், சாட்சிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாக மாட்டார்களா? பிறகு எப்படி வழக்கு விசாரணை நியாயமாக நடக்கும்?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அமைச்சராக வேண்டுமா

மேலும் செந்தில் பாலாஜி தரப்பிடம், "நீங்கள் அமைச்சராகத் தொடர விரும்பினால், உங்கள் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும். அமைச்சராக நீடிக்கிறீர்களா அல்லது ஜாமீன் வேண்டும்?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்தக் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துகளை நீக்குமாறு செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், காலதாமதமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்கள். உடனே செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் மனுதாரர் மீண்டும் அமைச்சர் ஆவதற்கு தடையாகவும், எச்சரிப்பதாகவும் இருக்கிறறது. எனவே சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைப்பதற்கு முற்பட்டால் வழங்கிய ஜாமீனை ரத்துச்செய்யலாம்' என்று வாதிட்டார்.

ஜாமீன் எப்படி

இதற்கு நீதிபதிகள், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு விதிக்கப்பட்ட தடையாக பார்க்க முடியவில்லை. நீண்ட நாள் சிறையில் இருந்தார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த 2 நாட்களில் மீண்டும் அமைச்சரானதை நீதிபதி அபய் எஸ்.ஓகா கடுமையாக ஆட்சேபித்தார். வழக்குகள் விசாரணை முடிந்து விடுதலையாகும் வரை, மீண்டும் அமைச்சராக வேண்டுமென்றால், அதற்கான அனுமதி கோரி மனு செய்யலாம்.

மனு தள்ளுபடி

தீர்ப்பில் தெரிவித்த கருத்தை நீக்க கோரும் மனுவை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றால், இந்த அமர்வில் நீதிபதி ஏ.ஜி.மாசியும் இடம்பெற வேண்டும். வாய்மொழியாக தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமும் தேவையில்லை' என்று குறிப்பிட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தார்கள்.

உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு பிறப்பித்த உத்தரவு எப்படி இருந்தது

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த முந்தைய உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. அதில் எந்த விளக்கமும் தேவையில்லை. அந்த உத்தரவு குறித்து தவறாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல் செந்தில் பாலாஜி அமைச்சராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால், நீங்கள் அமைச்சராக ஆன பிறகு சாட்சிகளைக் கலைக்க அல்லது அச்சுறுத்த முயற்சிக்கிறீர்கள் என்று கண்டறியப்பட்டால், உங்கள் ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும்" என்றே உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக எச்சரித்திருந்தது.

மீண்டும் அமைச்சராவதற்கான வழி உள்ளதா

மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க விரும்பினால், தனி மனுவாகத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறலாம்" என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதன் மூலம், அவர் மீண்டும் அமைச்சராவது நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் அதிகாரப் பதவியில் நீடிப்பது, வழக்கை நியாயமாக நடத்துவதைத் தடுக்கும்; சாட்சியங்களின் மனதை அச்சுறுத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+